இன்று (அக்.2) காலை 9:55 மணியளவில் வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க செய்த நாசவேலை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் கங்கரர் – சோனியானா பிரிவில் உள்ள பாதையின் ஜாக்கிள் பிளேட்டில் வேண்டுமென்றே கற்கள் ஆங்காங்கே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.ரயிலின் லோகோமோட்டிவ் பைலட்டுகள் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தி விபத்தைத் தவிர்க்க விரைவாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஒரு இடத்தில் ஓர் அடி கம்பிகள் வைக்கப்பட்டு, அதிலும் கற்கள் நிரப்பி இருக்கின்றனர். ரயில் பாதையில் கற்கள் வைக்கப்பட்டிருந்ததை, ரயில்வே ஊழியர்கள், உடனடியாகக் கவனித்து, தண்டவாளத்தை சீர் செய்ததால் இந்த நாச வேலை முறியடிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் இணைப்பை அதிகரிக்கும் வகையில், மேலும் 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி காணொளி மூலம் தொடங்கிவைத்தார். இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் ஒரு வந்தே பாரத் ரயில், உதய்பூர் – ஜெய்ப்பூர் வழித்தடத்தில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.