Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு ஈழம் மாவீரர்

தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறவேண்டிய ஒழுங்கு விதி முறைகள்

Stills by Stills
21/07/2023
in மாவீரர்
0
தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறவேண்டிய ஒழுங்கு விதி முறைகள்
0
SHARES
42
VIEWS
ShareTweetShareShareShareShare

தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறவேண்டிய ஒழுங்கு விதி முறைகள்

இதய கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்! மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவாகிப்பவர்கள்.
-தழிழீழ தேசிய தலைவர்

எமது வீர விடுதலை வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டு இருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல.

இந்த வீரர்களின் சாவு, எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர் மூச்சாக, எமது போரளிகளின் உறுதிக்கு உத்வேகம் அளிக்கும் ஊக்க சக்தியாக அமைந்து விட்டன. இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாதவர்கள், சுகந்திரச் சிற்பிகள், எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீர மறவர்கள். எமது இனத்தின் சுகந்திரத்திற்காக, சுய கௌரவத்திற்காக, பாதுகப்பிற்காக தமது இன்னுயிரை ஈர்ந்துள்ள இந்த மகத்தான தற்கொடையளர்கள் (தியாகிகள்) காலம், காலமாக எமது இதயக் கோவிலில் வைத்துப் பூசிக்கபடவேண்டியவர்கள்.

ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கையை வாழும் ஒரு சாதாரண மனித பிறவி அல்ல, அவன் ஓர் இலட்சியவாதி, ஓர் உயரிய இலட்சியத்திற்காக வாழ்பவன், மற்றவர்களின் விடிவிற்காக, விமோசனத்திற்காக வாழ்பவன், சுயநலமற்ற, அவனது வாழ்க்கை உன்னதமானது. அர்த்தமுள்ள சுகந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக அவன் தன் உயிரையும் அர்பணிக்க துணிகிறான். எனவே, விடுதலை வீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள், அசாதாரணமான பிறவிகள்.

“புலிகளின் தாகம் தமிழ்ழீழ தாயகம்”

வே.பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலை புலிகள்.

மாவீரர் நாள் கையேடு!
மாவீரர் நாள் (நவம்பர் 27)

மாவீரர் தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தும், எதிரி பாசறையை வெடிகுண்டு கொண்டு தகர்த்தும் சத்திய வேள்வியில் நித்தமும் வேகி கொடியது பறந்திட உயிரினை ஈய்ந்து உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு படைத்து தமிழீழ மண்ணெங்கும் நினைவுச் சிலைகளாய், ஓவியமாய் வெள்ளை மலரேந்திய வேதங்களாய் ஈழமண்ணில் புது விதையாய் விடுதலையின் தீச்சுடராகி தேசமங்கும் சோதியாய் நிற்பவரே மாவீரராவார்.

ஏன் இவர்கள் மாவீரர்கள்?

தமிழ் இன விடிவுக்காய் மரணித்தவர்கள். தேசம் தூங்கியபோது விழித்திருந்தவர்கள். உணர்வுத் தீக்களை தமக்குள்ளே சிறை போட்டவர்கள். தேச மக்களின் பாசப் பிணைப்புகளுக்காக தமது பாசங்களைப் பொசுக்கியவர்கள். பள்ளிப் பராயத்தை பள்ளித் தோழருக்காய் பறிகொடுத்தவர்கள் ஊரெல்லாம் உறங்கும் வேளை உறக்கமின்றி விழித்தவர்கள். எல்லை சுற்றி வேலிச் சிலையாய் நின்றவர்கள். தமது மக்களுக்காய் கால்களை, கரங்கைளை இழந்து நின்றவர்கள்! தேச விடுதலைக்காய் மரணித்த மாவீரர்களுக்கு தமிழீழ மண்ணில் மாவீரர் நாள் உறுதிப்பாடாயிற்று. இவ்வெழுச்சி நாளே தமிழீழத்தின் தேசிய நாளாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலி வீரர்களில் முதலாவதாக வீரச் சாவெய்திய மாவீரர் சத்தியநாதனின் (சங்கர்) நினைவு நாளை நவம்பர் 27 ஐ தமிழீழ தேசம் மாவீரர் நாளாக பிரகடனம் செய்துள்ளது.

வருடந்தோறும் இப்புனித நாளினை தமிழினம் உணர்வு பூர்வமாகக் கொண்டாடுகிறது. நினைவு கூருகின்றது. மாவீரர் நாளை எதிர்கொள்ளுதல் மாவீரர் நாளானது மாவீரர் எழுச்சி நாளாகத் தமிழீழம்  எங்கும் கொண்டாடப்படுகிறது.

எழுச்சி மிகுந்த இந்த மாவீரர் எழுச்சி நாட்களானது நவம்பர் 25 இல் தொடங்கி நவம்பர் 27 இல் முடிவடைகின்றது. இம்மாவீரர் நாட்களைக் கொண்டாடும் முகமாக நவம்பர் 25 ஆம் நாளுக்கு முன்னதாகவே தமிழீழம் எங்கும் புனிதப்பட்டு விடுகிறது. மாவீரர் தூபிகள், நிழற்படங்கள் அமைந்த இடங்கள், இல்லங்கள், ஒழுங்கைகள், வீதிகள், கல்விக் கூடங்கள் ,பொது இடங்கள், காரியாலயங்கள் அனைத்தையுமே, மக்கள் அனைவரும் தனித்தும், ஒருமித்தும் புனிதமாக்கி விடுகின்றனர்.

இவையாவும் மாவீரர் நினைவாக அலங்கரிக்கப்பட்டு தமிழீழ நாடு புதுப் பொலிவுடன் விளங்கும்.

மாவீரர் நாள் எழுச்சி நாட்கள் 25 -27 

ஆரம்ப நாள் காலை 8 மணிக்கு தேசியக் கொடி ஏற்றத்தைத் தொடர்ந்து மாவீரர் எழுச்சி நாட்கள் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகும். தமிழீழம் முழுவதும் எழுச்சிக் கோலம் பூண்டு பொலிவுடன் விளங்கும். அனைத்துத் தமிழீழ மக்களும் அலங்கரிப்பு நிகழ்ச்சியிலும் வீரவணக்க நிகழ்வுகளிலும் கலந்துகொள்வார்கள்.

இந்த நாட்களில் வேறு களியாட்டங்கள், கொண்டாட்டங்கள், எதுவும்  நடைபெறமாட்டாது. தேவையற்ற கேளிக்கைகள் வேண்டத்தகாத சூழ்நிலைகள் மறைந்துவிடும். மதுச்சாலைகள் மூடப்பட்டு மது பாவிப்பதை நிறுத்திவிடுவார்கள்.

வீடுகள் தோறும் விடுதலைத் தேசிய கீதங்கள் ஒலிக்கும். மக்கள் பிரிவு, பிரிவாக, அமைப்புக்கள் ரீதியாக, ஆக்கபூர்வ வேலைத் திட்டங்களிலும், மற்றும், மாவீரர் நாள் நிகழ்வுகளிலும் கலந்துகொள்வர்.

பாடசாலைகள்.

ஆசிரியர்கள் மாவீரரின் மாண்பினையும் மாவீரர் நாளின் மகிமையையும் மாணவர்களுக்கு முன்கூட்டியே தெளிவினை ஏற்படுத்துவார்கள். பாடசாலைகள் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

நவம்பர் 25 ஆம் நாள் காலை 9.00 மணிக்கு தேசியக் கொடி ஏற்றலும், பாடசாலைகளில் வீரவணக்கக் கூட்டங்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மாவீரர் நினைவாக சமூக சேவைகளிலும் ஈடுபடுவர். மாவீரருக்கு மலர் வணக்கம் செலுத்தும் பணியினை மாணவர்கள், பொது மக்களும், பொது நிறுவனங்களும், முழுமையாக இணைவதில் தேசியப்பற்று உரமேற்றப்படுகிறது.

தமிழீழ மாவீரர் நாள் நவம்பர்-27

தமது இன்னுயிரை ஈந்து தமிழீழ விடுதலைப் போருக்கு வீறு சேர்த்த மாவீரர்கள் அவர்களின் தலைமுறையிலேயே போற்றப்பட வேண்டும். அவர்களின் வீரங்களும் ஈகங்களும் அருஞ் செயல்களும் மக்களிடம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். அந்த மாவீரர்களின் பெற்றோர்களும் குடும்பத்தினர்களும் அவலப்படக் கூடாது என்ற நோக்கின் அடிப்படையில், எமது தலைவரின் எண்ணத்திலிருந்து உருவானது தான் மாவீரர் நாள்.

தமிழீழ விடுதலைப் போருக்கு இன்னுயிரை ஈந்து உரமாகிப்போன மாவீரர்களின் எண்ணிக்கை பத்து, நூறு என்ற நிலை மாறி ஆயிரக்கணக்காக உயர்ந்துவிட்ட நிலையில், ஒவ்வொரு மாவீரரையும் தனித்தனியாக ஆண்டு தோறும் அவரவர் நிறைவு நாட்களில் நினைவுகூர இயலாது என்ற நிலையில், அனைவரையும் ஒரே நாளில் நினைவு கூரக் கூடியதாக தமிழீழ விடுதலைப் போரில் முதல் களச் சாவடைந்த எமது இயக்க வீரர் லெப்ரினன்ட் சங்கர்  (சத்தியநாதன்)  அவர்களின் நினைவு நாளான நவம்பர் 27 ஆம் நாளை பொதுவான நாளாகத் தேர்ந்தெடுத்த எமது தலைவர் 1989 ஆம் ஆண்டில் தமிழீழ மாவீரர் நாளை அறிவித்தார்.

விடுதலைப் போராட்டத்தில் உலகம் வியக்கும் வகையிலே புதிய வரலாறு படைத்து புதுமை சேர்த்து நிற்கும் எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மண் மீட்புப் போரிலே பல வெற்றிகளைக் குவித்துவரும் அதே நேரம், நாட்டை எல்லாத் துறைகளிலும் கட்டியெழுப்புவதற்கான திட்டங்களைத் தீட்டி வழிகாட்டி இயங்கி வருவதோடு தூய்மையான தேசிய விடுதலைப் போரை வீறோடு நடாத்தி, வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களைப் போற்றி நினைவில் நிறுத்தவும், அவர்களது பெற்றோரும் குடும்பத்தினரும் அல்லலுறும் நிலையை மாற்றவும் எனப், பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயற்படுத்தி வருகின்றனர்.

1989 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப்பெரிய நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் தமிழீழ மக்களாலும், உலகாத் தமிழர்களாலும் உணர்வெழுச் சியுடன்  கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப் படுவதற்கும் தமிழீழம், மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்கும் பெரும் வேறுபாடுகள் உண்டு.

ஏனைய நாடுகள் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழா எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை. ஆனால் விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும், எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கு மத்தியிலும், பல்வேறு நெருக்கடிகளுக்கு கிடையிலும், போராட்டத்தையும் நடாத்திக் கொண்டு, தமிழ் மக்கள் மண்ணின் விடிவுக்காகத் தம் இன்னுயிரை ஈய்ந்த மாவீரர்களை எழுச்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர்.

வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலும் இல்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டு நடுகற்கள் நாட்டப்பட்டு வழிபாடியற்றப்படுகின்றன. மாவீரர் நாளில் மாவீரர்களின் பெற்றோர் குடும்பத்தினர் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றி மதிப்பளிக்கப்படுகின்றனர்.

உலகில் எங்குமே தமிழீழ மாவீரர் நினைவுபோல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் அவர்களின் பெற்றொரும் குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ நடைபெறுவதாகவோ வரலாறில்லை.

மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும் நடைமுறை ஒழுங்குகளும். 

1989 ஆம் ஆண்டில் நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளாகவும் 1990 ஆம் ஆண்டிலிருந்து 1994 ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27 ஆம் நாள் வரை மாவீரர் வாரமாகவும் தமிழீழ மக்களால் எழுச்சி நிகழ்வாக நடைபெற்றுவந்த தமிழீழ மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வுகள், 1995நவம்பர் மாதம் நிகழ்வின் நேரம் மாற்றப்பட்டது.

1995 ஆம் ஆண்டிலிருந்து, நவம்பர் 25 ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள்வரை மூன்று நாட்கள் தமிழீழ மாவீரர் நாள் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்பட விருக்கின்றன.

தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் மாவீரர் எழுச்சி நாள் ஆரம்பமாகும்.

மாவீரர் நாள் தொடக்க நிகழ்வுகள்! 
01. சுடரேற்றல்
02. தேசியக் கொடியேற்றல்
03. மலர் வணக்கம்
04. அக வணக்கம்
05. உறுதியுரை
06. நினைவுரை என்பன வரிசை ஒழுங்கில் மேற்கொள்ளப்படும்.

தொடக்க நிகழ்வுகள் மாவீரர் நாள் எழுச்சி நாட்களான மூன்று நாட்களிலும் நடைபெறும்.

தேசியக் கொடி ஏற்றல், மாவீரர் நாள் எழுச்சி நாட்களுக்கான நிகழ்வுகள் நவம்பர் 25 ஆம் நாளன்று காலை 8.00 மணிக்கு தேசியக் கொடி ஏற்றலுடன், ஆரம்பமாகும்.

மாவீரர் துயிலும் இல்லங்களில் 25 ஆம் நாள் காலை 8.00 மணிக்கு ஏற்றப்படும் தேசியக் கொடி நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்த பின் இறக்கப்படும்.

இயக்கப் பணிமனைகள், தளங்களில் முதல் இரண்டு நாட்களிலும் மாலை 6.00 மணிக்கு கொடி இறக்கப்பட்டு, மறுநாள் காலை ஏற்றப்படும்.

நவம்பர் 27ஆம் நாள் காலையில் ஏற்றப்படும் கொடி, மாவீரர் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்த பின் இறக்கப்படும். பொது நிறுவனங்களிலும் பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் பணி முடிந்த பின் பகல் 12.01 இன் பின்பாகவும் மாலை 6.00 மணிக்கு முன்பாகவும் தேசியக் கொடி இறக்கப்பட்டு மறுநாள் காலையில் ஏற்றப்பட வேண்டும்.

(தேசியக் கொடி ஏற்றுதல், இறக்குதல் தொடர்பான கூடுதலான விளக்கங்கள் தேசியக் கொடிப் பயன்பாட்டு விதிக் கோவை என்னும் நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.)

நினைவொலி எழுப்பலும் சுடரேற்றலும் 

27ஆந் திகதி சுடரேற்றும் நேரத்தை தமிழீழ மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பர். மாலை 6.05 மணிக்கு தமிழீழம் எங்கும் சமகாலத்தில் அனைத்து ஆலய, தேவாலய மணிகளும், ஒரு மணித்துளி நேரம் ஒலி எழுப்பும். அந்த நேரத்தைத் தொடர்ந்து எல்லா மக்களும் அகவணக்கம் செலுத்துவார்கள்.

துயிலும் இல்ல மைதான நடுவில் – பீடத்தில் சற்று உயரமான பெரிய சுடர் நாட்டப் பட்டிருக்கும். மக்கள் வெள்ளம் உணர்வுக் கொந்தளிப்போடு மைதானத்தைச் சுற்றி நின்று தியாகங்களை நெஞ்சில் நினைத்திடத் தீச்சுடர் ஏற்றப்படும்.

அமைப்பின் முதன்மையானவர்கள் மத்திய சுடரை ஏற்ற மாவீரரின் பெற்றோர் உரித்துடையவர்கள் தீச்சுடரை சமகாலத்தில் ஏற்றுவர். சமகாலத்தில் ஒவ்வொரு இல்லங்களிலும் வாசலிலும் மாவீரரின் சுடரொளியை அனைவரும் ஏற்றுவர்.

சுடரானது சுவாலை விட்டெரியும். ஒவ்வொரு சுடர்களிலும் மாவீரர்களின் முகங்கள் பிரகாசிக்கும். தமிழீழம் முழுவதும் சுடரொளி ஓங்கிப் பரவும். மக்கள் குமுறி எழுந்து கண்ணீர் விட்டு நிற்க தியாகிகளின் காவியங்கள் ஒவ்வொரு தமிழீழ மக்கள் உணர்வுகளிலும் மீட்டப்படும்.

சுடரேற்றி தியாக தீபங்கள் இவை என்று கூறத்தக்கதாக நினைவுகூரப்பட வேண்டும். வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள் போல தமிழீழமெங்கும் மாவீரர் சுடர்கள் இந்நேரத்தில் எங்கும் ஒளிர வேண்டும்.

சிட்டி விளக்கேற்றக் கூடிய இடங்களில் தொகையான சிட்டி விளக்குகள் ஏற்றி நினைவு கூரலாம். வாசலில் தீப்பந்தங்கள் ஏற்றியும் பொது இடங்களில் பெரிய சுடர்களை ஏற்றியும் நினைவுகூர வேண்டும்.

இந்த சுடரேற்றும் நிகழ்வானது விடுதலைப் பாதைக்கு உறுதியையும் உணர்வையும் கொடுத்து நிற்கின்றது.

மாவீரர் நாள் நவம்பர்-27 
இரவு நிகழ்வுகள்” 

தேசியத் தலைவரின் மாவீரர் நாள் நினைவுரை!
(மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரை)

நவம்பர்-27 மாலை 6.05 மணிக்கு ஒலி எழுப்பும் நிகழ்வு தொடங்க கூடியதாக தேசியத் தலைவரின் மாவீரர் நாள் நினைவுரை 5.50, மணிக்குப் பின்னர் இடம்பெறும்.

நினைவொலி எழுப்புதல் (6.05 ) மணி!

தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நினைவுரை நிறைவடைந்தவுடன் உடனடியாக துயிலும் இல்லங்களில் 6.05 மணிக்கு அனைத்து வழிபாட்டு இடங்களிலும், வீடுகளிலும், மணி ஒலி ஒரு மனித்துளி நேரம் எழுப்பப்படும், உயிர்காப்பு பணியில் ஈடுபடும் ஊர்திகள் தவிர ஏனைய அனைத்து ஊர்திகளும் நிகழ்வு தொடங்குவதுக்கு ஏற்ற வகையில் நிறுத்தபட்டு அமைதி பேணப்படல் வேண்டும்.

அகவணக்கம் (6.06 ) மணி!

மாவீரர்களுக்கான நினைவொலி நிறுத்தபட்டவுடன் (6.06 ) மணிக்கு மாவீரர்களுக்கான ஒரு மணித்துளி அகவணக்கம் செலுத்தப்படும். இந்த நேரம் இல்லங்களிலும் ஏனைய இடங்களிலும் இருக்கும் தமிழீழ மக்கள் எழுத்து நின்று, மாவீரர்களை நினைவில் நிறுத்தி அகவணக்கம் செலுத்துதல் வேண்டும்.

ஈகை சுடர் ஏற்றுதல் (6.07) மணி!

அகவணக்கம் நிறைவுற்றதும் ( 6.07 ) மணிக்கு ஈகைசுடர் ஏற்றப் படல் வேண்டும் (மாவீரர்களின் பெற்றோர் சுடர் ஏற்ற வேண்டிய கல்லறைகள், நினைவு கற்களுக்கு முன்னால் ( 5.15 ) மணிக்கு நிற்ககூடிய வகையில் ஒழுங்குகள் மேற்கொள்ள பட்டிருக்கும்)

மாவீரர் துயிலும் இல்லங்களில் உள்ள மாவீரர்களின் கல்லறைகள், நடுகற்கள் முன், மாவீரர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் அதே நேரம் மாவீரர் துயிலும் இல்லங்களில் இடம்பெயர்ந்த மாவீரர்களின் பெற்றோர்கள் அவர்களுக்கென ஒழுங்கு செய்யபட்ட பிரத்தியோக இடங்களில் ஈகைசுடர் ஏற்றுவார்கள்.

இவை தவிர துயிலும் இல்லங்களுக்கு வர இயலாத பொதுமக்கள் தமது இல்லங்களில், பொது இடங்களில், அலுவலகங்கள், விளையாட்டு இடங்கள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் உரிய நேரத்தில், உரிய முறைப்படி ஈகைசுடர் ஏற்றுவார்கள், ஏற்றும் போது, மாவீரர் பாடல் ஒலிக்கப்படும் (மாவீரர் ஈகைசுடர் ஏற்றப்படும் நேரத்தில் அதன் நோக்கம்,அதன் புனிதம் புரிந்துகொள்ளாது வீதிகளில் ரயர்களை எரிப்பதோ, அல்லது வேறுவகையில் ஒலி, ஒளி, உருவாக்குவதோ தவிர்க்கப்படல் வேண்டும்.

அலங்காரம் (சோடனை)

எமது அமைப்பை சார்ந்த வீரச்சாவு, வீரவணக்க கூட்டம், துயிலும் இல்லம், மாவீரர் விசேட நிகழ்வு, வேறு அனைத்து நிகழ்வுகளுக்கான அலங்காரங்கள், சமுக, சமய, வேறு அரசியல் சார்ந்ததாக இருக்காமல், எமது தேசியம் சார்ந்ததாக, தேசியக் கொடியின் நிறங்களைப் பிரதி பலிப்பதாக அமைதல் வேண்டும்.

எமது அலங்கார முறையும் ,நிறங்களும்!

சிவப்பு, மஞ்சள், கருப்பு -தேசியக் கொடியைப் பிரதிபலிக்கும், கருப்பு நிறம், கரும்புலிகள் நாள், மற்றும் கரும்புலிகள் சம்மந்தமான நிகழ்வுகளுக்கு மட்டும் கலந்து பயன்படுத்தலாம்.

*வீரச்சாவு கால் நாட்டலுக்கு சிவப்பு, மஞ்சள் துணிகளை பாவித்தல் வேண்டும்.

*மேசை விரிப்பு, பீட விரிப்புக்களுக்கும் சிவப்பு, மஞ்சள் நிறங்களால் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். வெள்ளை நிற விரித்தல் பாவிப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.

*இவ் அலங்காரங்கள் தனித்துவமாக, மாவீரர்களின் தற்கொடை தியாகம், அமைப்பு, இலட்சியங்களை மக்கள் மனங்களில் பதிந்து எமது போராட்டத்தின் பால் ஈர்க்கப்பட்டு இணைந்து செயற்பட வழிசமைத்தல் வேண்டும்.வ

கடைப் பிடிக்க வேண்டிய சில நடைமுறைகள், ஆரம்ப நிகழ்வுகள்!
*1 பொதுச்சுடர்
*2 தேசியக்கொடி ஏற்றல்
*3 ஈகைசுடர்
*4 மலர்வணக்கம்
*5 அகவணக்கம்
*6 உறுதியுரை
*7 நினைவுரை
*8 எமது மாவீரர் நிகழ்வுகள் அனைத்திலும் ஈகைசுடர் ஏற்றுதல் கட்டாயமாகும், மங்கள விளக்கு ஏற்றக் கூடாது, அகவணக்கத்திற்க்கும் நேரம் குறிக்கக் கூடாது.

மாவீரர் நாள் கையேடு

தவிர்க்க வேண்டியவை!

அஞ்சலி, மவுன வணக்கம், மலரஞ்சலி, மங்கள விளக்கு, அஞ்சலிஉரை, அஞ்சலிக் கூட்டம், அகவணக்கம் -ஒருநிமிடம் இரு நிமிடம் என குறித்து குறுதல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.

சேர்க்கப்பட வேண்டியவை!

வீரவணக்கம், அகவணக்கம், மலர்வணக்கம், ஈகைசுடர், வீரவணக்க உரை, வீரச்சாவு, வீரச்சாவுக் கூட்டம், வித்துடல் விதைப்பு. போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

முக்கிய விடையம்!

மாலை 6.00, மணிக்குப் பின்னர் எந்த நிகழ்வுகளிலும் தேசியக் கொடி ஏற்றுதல் தவிர்க்கபடல் வேண்டும், மாலை 6.மணிக்கு முன்னர் ஆரம்பிக்கப்படட நிகழ்வு இரவு நேரத்திலும் தொடர்ந்து நடைபெறுமானால் நிகழ்வு நிறைவில் தேசியக் கொடி இறக்குதல் வேண்டும், இரவு நேரத்தில் தேசியக் கொடிக்கு படும் வகையில் வெளிச்சம் பாய்ச்சுதல் வேண்டும்.

எக் காரணம் கொண்டும் தேசியக் கொடி கம்பத்துடன் மடித்துக் கட்டுதல் கூடாது, தேசியக் கொடியை மடித்து பீடத்திற்கு அருகில் ஒரு மேசையின் மேல் புனிதமான தட்டில் வைக்க வேண்டும்.

போற்றப்பட வேண்டிய பண்பாடகட்டும்!

எமது தாயகமாம், தமிழீழ நாட்டின் தேசிய நாட்களில், மாவீரர் நாள் மிக முக்கிய நாளாகும், மாவீரர் நாள் என்பது தமிழ் ஈழத்தின் விடிவிற்காகவும், உயர்வுக்காகவும் உழைத்து, உயிரை தற்கொடையாக ஈந்து, இந்த மண்ணிற்கே உரமாகி விட்டவர்களினதும், எமது மூச்சுடன் ஒன்றாகக் கலந்து விட்டவர்களுடைய புனிதமான நினைவு நாளாகும்.

உங்கள் உயிரினும் மேலான குழந்தைகளும், எமது சக போராளிக்களுமான இம் மாவீரர்களின் தியாகம், அவர்களின் உணர்வுகள், இலட்சிய தாகம், கனவுகள் என்பன எம்மால், என்றுமே மறைக்கப்பட முடியாதவையாகும், புனிதத் தன்மை வாய்ந்ததும் ஆகும். காலம், கலாமாக நினைவு கூர்ந்து, என்றும் போற்றப்பட வேண்டிய வீரம் மிகு புனித நாளாகும்.

இம் மாவீரர்களின் நினைவுகள், எம்மை வழிநடத்தும் உந்து சக்தியாக என்றும் எம்முடன் கூடவே இருக்கும், மாவீர்களின் இத்தகைய நினைவு கூரல் என்பது ஒரு நிகழ்வாக மட்டும் இருந்து விடாது, எமது மக்களின் வரலாற்று சுவடியகவும், பண்பாட்டுக்கு உரியவையாகவும் வளர்ந்து நிற்கும்.

எமக்குரிய இந்த உயரிய நிகழ்வை தத்துவார்த்தமாகவும், உணர்வு பூர்வமாகவும் நிலை நாட்டுவதற்காக எமது மக்கள் அனைவரினதும் மனமுவந்த, ஒருங்கிணைந்த பங்களிப்புக்களின் ஊடாக, எழுச்சி கொள்ளும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வேண்டி நிற்கிறோம்.

புலிகளின் தாகம் தமிழ்ழீழ தாயகம்

நன்றி!

பணி முதல்வர்,
தமிழீழ மாவீரர் பணிமனை,
அரசியல்துறை,
தமிழீழ விடுதலை புலிகள்,
தமிழீழம்.

 

Tags: தமிழீழமாவீரர்நாள்மாவீர நாள்நடைமுறைகள்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

லிசா எனும் ஏஐ செய்தி வாசிப்பாளர்: செயற்கை நுண்ணறிவின் அடுத்தகட்டம்

அடுத்த செய்தி

மேஜர் தனுசன்

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

மண்ணின் விடுதலைக்கு உயிரொளி தந்து மறைந்த எங்கள் மாவீர தெய்வங்களுக்கு வீர வணக்கம். – வ.கௌதமன்

by Stills
28/11/2024
0

நீங்கள் கணிக்க முடியாத பெரும் வெடிப்பைக் கக்கும் எரிமலைப் போல ஒருநாள் நாங்கள் எங்கள் தனித் தமிழீழத்தை அடைந்தே தீருவோம். மண்ணின் விடுதலைக்கு உயிரொளி தந்து மறைந்த...

மேலும்...

கரும்புலிகள் நாள்

கரும்புலிகள் நாள்
by Stills
12/12/2024
0

கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள் எனப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான...

மேலும்...

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..
by Stills
29/06/2024
0

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறையில் நீண்ட காலமாக களமாடி 2009 க்கு பின்னர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த புலனாய்வுத்துறையின் மேலாளர்களில் ஒருவரான விநாயகம் அவர்கள் பிரான்ஸ் நாட்டின்...

மேலும்...

களத்திலே கருவான மாவீரனின் மகள் எழுதுகிறேன்…. 

களத்திலே கருவான மாவீரனின் மகள் எழுதுகிறேன்…. 
by தரணி
16/05/2024
0

களத்திலே கருவான மாவீரனின் மகள் எழுதுகிறேன்.... அப்பா ! 15 ஆம் ஆண்டு நினைவுகளுடன் (15.05.2024). காவியத் தலைவன் ஓவியம் ஒன்று வரைந்தாராம் அதற்கு வர்ணங்கள் தீட்டி சொர்ணம்...

மேலும்...

“நாட்டுப்பற்றாளராக” மதிப்பளிக்கப்பட்டார் ‘ கிண்ணி அம்மா ‘ – அனைத்துலகசெயலகம் மதிப்பளித்தது .

“நாட்டுப்பற்றாளராக” மதிப்பளிக்கப்பட்டார் ‘ கிண்ணி அம்மா ‘ – அனைத்துலகசெயலகம்  மதிப்பளித்தது .
by Stills
12/02/2024
0

தமிழீழ விடுதலைப்பற்றோடு, போராளிகளை அன்புடன் அரவணைத்து ஆதரவளித்த கந்தசாமித்துரை வள்ளிநாயகி (கிண்ணியம்மா) அவர்கள், 01.02.2024 அன்று உடல் நலக்குறைவினால் சாவடைந்தார் என்ற செய்தி எமக்குப் பெருந்துயரினை ஏற்படுத்தியுள்ளது....

மேலும்...

விடுதலை வரலாற்றின் காலப்பதிவான தளபதி. கேணல். கிட்டு.!

விடுதலை வரலாற்றின் காலப்பதிவான தளபதி. கேணல். கிட்டு.!
by Stills

கிட்டண்ணை ஓர் அமைப்பின் தளபதிமட்டுமல்ல. ஈழத்தமிழினத்தின் வீரத் தளபதி. சின்னஞ்சிறு குழந்தைமுதல் முதியோர் வரை எல்லோராலும் நேசிக்கப்பட்ட மனிதன் அவர்.துணிவு, தன்னம்பிக்கை, உடனடியாக பிரச்சினைகளைத் தீர்க்கும் முடிவெடுக்கும்...

மேலும்...
அடுத்த செய்தி
மேஜர் தனுசன்

மேஜர் தனுசன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?

முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?

13/06/2025
தியானத்தின் நன்மைகளும் பயன்களும்.!

தியானத்தின் நன்மைகளும் பயன்களும்.!

13/06/2025
தமிழர்கள் திருமண முறை

தமிழர்கள் திருமண முறை

12/06/2025
குளோபல் சௌத் மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியாவின் உரை.!

குளோபல் சௌத் மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியாவின் உரை.!

12/06/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.