Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு ஈழம் மாவீரர்

லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 37ம் ஆண்டு வீரவணக்க நாள்

அரவிந்த் by அரவிந்த்
13/10/2023
in மாவீரர்
0
0
SHARES
62
VIEWS
ShareTweetShareShareShareShare

விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும்,தலை சிறந்த போர் தளபதியும்,மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியுமாகிய லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 37ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தில் 1963ம் ஆண்டு பிறந்த மருசலனின் பியூஸ்லஸ் என்ற தளபதி விக்ரர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்றவர்.

எமது விடுதளைப்போராட்டமானது பறந்து விரிந்து, ஆழ வேருன்றி பெருகிவிட்டதாக தனக்கே உரித்தான வளர்ச்சி கண்டு நிற்பதை உலகம் புரிந்து கொண்டுள்ளது. அன்று எமது குரல்கள் அடங்கிக்கிடந்தன, எமக்கான குரல்களும் கேட்காது கிடந்தன, இன்று எட்டி நின்றவர்களும் எமக்காக குரல்கொடுகின்றனர். இது ஒரு கால மாற்றம். இந்த மாற்றத்தை எம் இனத்திற்கு பெற்றுத் தந்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் வரிசையில் அத்திவாரக் கற்களாகி நிற்கும் விக்டர் போன்ற வீரத்ளதபதிகளை தமிழினம் மறக்காது.விடுதலைப் பயிரானது ஆதிக்க பாதங்களினால் மிதிபட்டுப் போய்விடுமோ, பேரினவாதிகளின் பெருமூச்சினில் கருகிவிடுமோ என்ற ஏக்கம் நிறைந்த காலங்களிலெல்லாம் தலைவருக்குப் பக்க பலமாக நின்று விடுதலைப் பயிரை உரமிட்டுப் பாதுகாத்துத் தந்த மூத்ததளபதிகளை வரலாறு நிச்சயம் பதிவு செய்யும்.

அன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி.மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தில் 1963ம் ஆண்டு பிறந்த மருசலனின் பியூஸ்லஸ் என்ற தளபதி விக்ரர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்றவர்.
எமது விடுதளைப்போர்ராட்டமானது பறந்து விரிந்து, ஆழ வேருன்றி பெருகிவிட்டதாக தனக்கே உரித்தான வளர்ச்சி கண்டு நிற்பதைக் உலகம் புரிந்து கொண்டுள்ளது.அன்று எமது குரல்கள் அடங்க்கிக்கிடந்தன, எமக்கான குரல்களும் கேட்காது கிடந்தன, இன்று எட்டி நின்றவர்களும் எமக்காக குரல்கொடுகின்றனர். இது ஒரு கால மாற்றம் இந்த மாற்றத்தை எம் இனத்திற்கு பெற்றுத் தந்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் வரிசையில் அத்திவார்கக் கற்களாகி நிற்கும் விக்டர் போன்ற வீரத்தலபதிகளை தமிழினம் மறக்காது.
விடுதலைப் பயிரானது ஆதிக்க பாதங்களினால் மிதிபட்டுப் போய்விடுமோ, பேரினவாதிகளின் பெருமூச்சினில் கருகிவிடுமோ என்ற ஏக்கம் நிறைந்த காலங்களிலெல்லாம் தலைவருக்குப் பக்க பலமகா நின்று விடுதலைப் பயிரை உரமிட்டுப் பாதுகாத்துத் தந்த மூத்த தளபதிகளை வரலாறு நிச்சயம் பதிவு செய்யும்.விடுதலைப்புலிகள் இராணுவ அழுத்தங்களுக்கு விட்டுக்கொடுக்கவோ அல்லது அரசியல் அழுத்தங்களுக்கு விளைபோகக்கூடியவர்களோ அல்லர் என்பதை மிகப்பெரிய வரலாற்று சாதனை ஒன்றினூடாக சர்வதேச சமூகத்துக்கு சத்தியம் செய்து கொடுத்த சாதனையாளன் தளபதி விக்ரர். 12,10.1986 அன்று மன்னார் மாவட்டம், அடம்பன் பகுதி சூற்றிவளைக்க வந்த நூற்றுக்கணக்கான சிங்களப்படையினரை எண்ணிக்கையில் குறைந்தளவு போராளிகளைக் கொண்டு முற்றிலும் பாதகமான சூழ்நிலையிலும்…. அதிகலை வேளையிலும் “இரண்டில் ஒன்று, ஒன்று அவன் அல்லது நாங்கள்” என்ற துணிவு மிகுந்த வார்த்தைகளை எங்கள் தொலைத்தொடர்பு சாதனங்களூடாக வழங்கிவிட்டு களத்திலே நேரில் இறங்கி வியூகம் அமைத்து, ஊடறுத்து, சிதைத்து, சடலங்கள் ஆயுதங்களை அள்ளி, சிறைபிடித்து என்றவாறு தாக்குதலை நகர்த்தி ” ஓட விடாதே”, “பார்த்துப் பார்த்து விழுத்து”, “ஹெலியை இறக்கவிடாதே”, இறங்கிய ஹெலியை பறக்கவிடாதே” என்றெல்லாம் தனது சுடுவிரல் அசைவினால் நெறிப்படுத்தி நின்ற வெற்றிகரமான சூழ்நிலையின் இறுதிக் கணத்தில் தளபதி விக்டரின் தொடர்பை இழந்து நின்ற அன்றைய சோகம் நிறைந்த நினைவுகளை பகிர்வதில் மனம் நிறைவடைய மறுக்கிறது.நாட்டுக்கு நாடு நடைபெற்ற யுத்தம்போன்று சர்வதேச யுத்த விதிகளுக்கு அமைவாக படையினரின் சடலங்களை ஒப்படித்தும், சிறைக் கைதிகளை பரிமாற்றம் செய்தமையும் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இன்றுவரை விடுதலைப்புலிகள் கடைப்பிடித்துவரும் நடைமுறையினை சிறிலங்கா அரசும், சர்வதேசமும் புரிந்துகொண்டிருக்கும்.


சிறிலங்காப் படையினரை சிறைப்பிடித்தும், படையினரின் சடலங்களை மீட்பதும் தமிழ்மக்கள் மத்தியில் மெல்லமெல்ல துளிர்விட்ட விடுதலைப் போராட்டம் மீதான நம்பிக்கையினை மேலும் பலபடிகள் பாய்ந்து செல்லவைத்த அற்புத நிகழ்வாகவே தளபதி விக்ரர் தலைமையிலான அன்றைய தாக்குதல் சம்பவம் அமைந்திருந்தது.1983ம் ஆண்டு யாழ் திருநெல்வேலியில் சிங்களப் படையினருக்கு எதிரான கண்ணிவெடித் தாக்குதலில் முக்கிய பாத்திரம் வகித்த தளபதி விக்ரர் அவர்கள் தமிழீழப் பகுதியில் தலைவரின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்ற இராணுவத்திற்கு எதிரான தாக்குதலிலும் பங்குபற்றியவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.1985ம் ஆண்டு மன்னார் போலிஸ் நிலையத் தகர்ப்பின் பொது பாதகமான சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாது எமது அணியினை நகர்த்தி இடையில் ஒன்று கூட்டி ஒழுங்குபடுத்தி மீண்டும் வேகமாய் நிதானமாய் நகர்த்தி “ராதா ஸ்ராட்”, “குமரன் ஸ்ராட்” ( லெப் கேணல் குமரப்பா ) என்று ஆரம்பக் கட்டளைகளை அணித்தளைவர்களுக்கு வழங்கி குறுகிய நேரத்தில் போலிஸ் நிலையத்தை வெற்றி கொண்டு ஒரே ஒரு போராளியின் வீரச்சாவுடன் ஏனையோரை கடல் கடந்து பத்திரமாக கரைசெர்ப்பது வரையில் தளபதியின் வழிகாட்டல் என்பது மறக்கமுடியாத நினைவாகி நிற்கிறது.அன்றைய வெற்றிகரத் தாக்குதலை பி.பி.சி செய்தியாளர் தெரிவிக்கும் போது விடுதலைப்புலிகளின் மதிநுட்பமும், துணிவும் நிறைந்த வெற்றிகரத் தாக்குதல் என வர்ணித்தார்.மன்னார் மக்கள் அன்றைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி தளபதி விக்ரருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்து கெளரவித்தனர். பெரும் மகிழ்வுடன் மக்களை வரவேற்கும் பண்பு. மிமிர்ந்து உயர்ந்த அழகிய தோற்றம், அன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய அன்றைய நாட்கள் மறக்க முடியாதவை.எமது விடுதலை இயக்கம் பிரசவித்த அக்கினி குஞ்சு என்பது மகளிர் படையணியின் வளர்ச்சி பற்றி எமது தலைவரின் வாக்கிற்கு உயிர் கொடுத்த தளபதியாக விக்டர் அன்று செயல்ப்பட்டார் எமது பெண் போராளிகளுக்கு முதன் முதல் களம் கற்றுக்கொடுத்து இன்று வியக்க வைக்கும் வளர்ச்சியை பெற்று நிற்கும் எமது விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் மூத்த சகோதரனாகவே திகழ்ந்தார்.தனது சிறந்த நிறைவான குரல்வளத்தால், பாடும் திறமையால் போராளிகளின் மனதை மற்றுமொரு கோணத்தில் இடம்பிடித்தும் தளபதி விக்டருக்கு இருக்கும் இன்னும் ஒரு சிறப்பு அம்சம்.கைத்துப்பாக்கியை அழகாக கழற்றி குறிதவறாது சுட்டுக்காட்டி, கமராவை கையாள்வதும், கலையை ரசிப்பதும் இயற்கையிலேயே அழகுணர்ச்சியுடன் பழகிவந்த தளபதி அவர்கள் எமது தலைவரால் வளர்க்கப்பட்டவர் என்பதில் நாம் பெருமையடைகிறோம்.

இன்று எமது விடுதலைப் போராட்டமானது ஆயிரம் படையினரை ஒரே நாளில் களத்திலிருந்து அப்புறப்படுத்திய வரலாற்று வளர்ச்சியை பெற்று நிற்பதை உற்று நோக்கும் போது மிகுந்த பக்குவத்துடன் எமது தாயக விடுதலைப்பயணம் நகர்ந்து செல்வதை இலகுவில் இனங்கண்டு கொள்ளமுடிகிறது.இன்றும் அன்றும் எமது தலைவர் அவர்களின் நேர்த்தியான வழிகாட்டலினால் மிக மிக உன்னத நிலையை எமது போராட்டம் சந்தித்து நிற்கிறது என்பது தெளிவாகின்றது.

என்றுமில்லாதவாறு எழுட்சி கொண்டு எமது மக்கள் நிற்கும் இவ்வேளையில் தாயகப்பற்றுணர்வுடன் ஆயிரம் ஆயிரம் விக்ரர்கள் புதிது துதிதாக எழுந்து வரவேண்டும் இதுவே இன்றுள்ள வரலாற்றுத் தேவையாகும்.
..

Tags: மாவீரர்கள்தமிழீழம்மன்னார்விக்ரர்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

கவிதனின் தினம் ஒரு திருக்குறள்- குறள் 790

அடுத்த செய்தி

நாமல் ஜனாதிபதி-மகிந்த விருப்பம்

அரவிந்த்

அரவிந்த்

தொடர்புடைய செய்திகள்

மண்ணின் விடுதலைக்கு உயிரொளி தந்து மறைந்த எங்கள் மாவீர தெய்வங்களுக்கு வீர வணக்கம். – வ.கௌதமன்

by Stills
28/11/2024
0

நீங்கள் கணிக்க முடியாத பெரும் வெடிப்பைக் கக்கும் எரிமலைப் போல ஒருநாள் நாங்கள் எங்கள் தனித் தமிழீழத்தை அடைந்தே தீருவோம். மண்ணின் விடுதலைக்கு உயிரொளி தந்து மறைந்த...

மேலும்...

கரும்புலிகள் நாள்

கரும்புலிகள் நாள்
by Stills
12/12/2024
0

கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள் எனப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான...

மேலும்...

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..
by Stills
29/06/2024
0

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறையில் நீண்ட காலமாக களமாடி 2009 க்கு பின்னர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த புலனாய்வுத்துறையின் மேலாளர்களில் ஒருவரான விநாயகம் அவர்கள் பிரான்ஸ் நாட்டின்...

மேலும்...

களத்திலே கருவான மாவீரனின் மகள் எழுதுகிறேன்…. 

களத்திலே கருவான மாவீரனின் மகள் எழுதுகிறேன்…. 
by தரணி
16/05/2024
0

களத்திலே கருவான மாவீரனின் மகள் எழுதுகிறேன்.... அப்பா ! 15 ஆம் ஆண்டு நினைவுகளுடன் (15.05.2024). காவியத் தலைவன் ஓவியம் ஒன்று வரைந்தாராம் அதற்கு வர்ணங்கள் தீட்டி சொர்ணம்...

மேலும்...

“நாட்டுப்பற்றாளராக” மதிப்பளிக்கப்பட்டார் ‘ கிண்ணி அம்மா ‘ – அனைத்துலகசெயலகம் மதிப்பளித்தது .

“நாட்டுப்பற்றாளராக” மதிப்பளிக்கப்பட்டார் ‘ கிண்ணி அம்மா ‘ – அனைத்துலகசெயலகம்  மதிப்பளித்தது .
by Stills
12/02/2024
0

தமிழீழ விடுதலைப்பற்றோடு, போராளிகளை அன்புடன் அரவணைத்து ஆதரவளித்த கந்தசாமித்துரை வள்ளிநாயகி (கிண்ணியம்மா) அவர்கள், 01.02.2024 அன்று உடல் நலக்குறைவினால் சாவடைந்தார் என்ற செய்தி எமக்குப் பெருந்துயரினை ஏற்படுத்தியுள்ளது....

மேலும்...

விடுதலை வரலாற்றின் காலப்பதிவான தளபதி. கேணல். கிட்டு.!

விடுதலை வரலாற்றின் காலப்பதிவான தளபதி. கேணல். கிட்டு.!
by Stills

கிட்டண்ணை ஓர் அமைப்பின் தளபதிமட்டுமல்ல. ஈழத்தமிழினத்தின் வீரத் தளபதி. சின்னஞ்சிறு குழந்தைமுதல் முதியோர் வரை எல்லோராலும் நேசிக்கப்பட்ட மனிதன் அவர்.துணிவு, தன்னம்பிக்கை, உடனடியாக பிரச்சினைகளைத் தீர்க்கும் முடிவெடுக்கும்...

மேலும்...
அடுத்த செய்தி

நாமல் ஜனாதிபதி-மகிந்த விருப்பம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
போலி நாணயத்தாள்களுடன் மொரட்டுவையில் ஒருவர் கைது !

போலி நாணயத்தாள்களுடன் மொரட்டுவையில் ஒருவர் கைது !

15/07/2025
சவுதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர்களுக்கும் அநுரகுமார திசாநாயக்காவிற்கும்  இடையில் சந்திப்பு.

சவுதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர்களுக்கும் அநுரகுமார திசாநாயக்காவிற்கும் இடையில் சந்திப்பு.

15/07/2025
இலங்கை பொருளாதார தடைகளை நீக்கினால் வரி கட்டணங்களை சரிசெய்ய முடியும்! அமெரிக்க ஜனாதிபதி.!

இலங்கை பொருளாதார தடைகளை நீக்கினால் வரி கட்டணங்களை சரிசெய்ய முடியும்! அமெரிக்க ஜனாதிபதி.!

10/07/2025
இன்று யாழ் தையிட்டியில் விகாரைக்கு எதிராக போராட்டம்.

இன்று யாழ் தையிட்டியில் விகாரைக்கு எதிராக போராட்டம்.

10/07/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.