Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home ஈழம்

தீயசக்திகளின் நடவடிக்கைக்குதுணைபோகும் அனைத்துசக்திகளுக்கும் எமது மாவீரர்கள் தண்டனைகொடுப்பார்கள்.!

Stills by Stills
02/12/2023
in ஈழம்
0
தீயசக்திகளின் நடவடிக்கைக்குதுணைபோகும் அனைத்துசக்திகளுக்கும் எமது மாவீரர்கள் தண்டனைகொடுப்பார்கள்.!
0
SHARES
17
VIEWS
ShareTweetShareShareShareShare
மாவீரர் நாளைகொச்சைப்படுத்தும் தீயசக்திகளின் நடவடிக்கைக்குதுணைபோகும் அனைத்துசக்திகளுக்கும் எமது மாவீரர்கள் தண்டனைகொடுப்பார்கள்.தலைவரையும் குடும்பத்தையும் உயிருடன்உள்ளது என்று கூறும் முட்டாள்களே உயிருடன் உள்ளவர்களை பழிபோட்டு சாவடிக்கிறீகள். இறந்தவர்களை உயிருடன் கொண்டு வரமுயற்சிக்கிறீர்கள்.
இன்னும் எமது ஈழத்தமிழர்கள் ஏமாளிகள் என்று நினைத்து உங்களை நீங்களே எமாற்றுகிறீர்கள். தமிழர்கள் விழிப்பு நிலைக்கு வந்து நீண்ட நாட்களாகிவிட்டது .அடுத்தவனின் உழைப்பில் சொகுசு வாழ்க்கை வாழுபவர்களுக்கு ஏற்றுக்கொள்வது துன்பமாகத்தான்  இருக்கும். என்ன செய்வது ஏற்றுத்தான் ஆகவேண்டும். நீங்கள்  மாற்றானிடம் விலைபோனதற்காக மற்றவர்களில் பழிபோடுவதை எப்போது திருத்திக்கப்போகின்றீர்கள். மூத்தவர்கள் உண்மை தெரிந்தவர்கள் மௌனமாக இருக்கிறார்கள் என்பதற்காக உங்கள் சுயரூபத்தை இன்னும் நீண்ட நாள்களுக்கு நிலை நிறுத்த முடியாது.
முட்டாள்களே! மாவீரர்களின் தியாகத்தை புரிந்து கொள்ளுங்கள். இறந்தவர்களை இறந்தவர்களாகவே இருக்க விடுங்கள். வேண்டுகோள் இல்லை.மாவீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தாதீர்கள். உங்கள் குடும்பம் காணாமல் போய்விடும் எச்சரிக்கை. தாய்நாட்டிற்காக உயிர்நீத்தஅனைத்து மாவீரர்களுடன் தலைவரும் அவரின் குடும்பமும்  பார்த்துக்கொண்டும் எம்மை காத்துக்கொண்டும் தான் இருக்கிறார்கள். நாம்இலட்சிய விதையைவிதைத்தோம்  அதற்கு மாவீரரின் இரத்தத்தை  பாச்சி வளர்த்தோம்  அந்தவிதை வளர்ந்து  விருட்சமாகி நிற்கின்றது. இனியும் கோமாளி வேஷம் வேண்டாம்  உண்மையை உரைப்போம் விரைவில்….. !

மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப்போராட்டத்தில்  பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துனைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழபுரட்சிகர மாணவர் இயக்க  உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும்.
இதற்குரிய நாளாக கார்த்திகை 27 ஆம் நாள்தமிழீழ விடுதலைப்புலிகள்அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது எமது மாவீரர் நாள் நினைவுகூறுவதுபோன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூரும் நாட்களோடு மாவீரர் நாள் ஒப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு. விடுதலைப் புலிகள் ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் கருதுகிறார்கள். மாவீரர் நாளாக நவம்பர் 27விடுதலைப்புளிகளால் 1989ஆண்டில்அறிவிக்கப்பட்டது. தமிழீழ மாவீரர் நாளாக இந்நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழீழ போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான சங்கர் (செ. சத்தியநாதன்) வீரமரணம் அடைந்தார்.
போராட்டக் காலத்தில் மாவீரர் நாளில் பல மாவீரர் குடும்பங்கள் மாவீரர்களின் கல்லறைக்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துவர். கொடியேற்றுதல், ஈகைச்சுடரேற்றுதல், மலர்தூவி அஞ்சலி செய்தல் என்பன மாவீரர்நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையும், விடுதலை வேட்கையையும், வீர உணர்வுகளையும் தரக்கூடியதான கலைநிகழ்வுகளும், பல்வேறு நினைவுகூர் நிகழ்வுகள், உரைகளும் இடம்பெற்றன. மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டனர். 2009 ஈழப்போராட்டத் தோல்வியின் பின் இலங்கை அரசால் மாவீரர்நாள் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டும், மாவீரர்நாள் நினைவு நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டும் உள்ளன.
புலம்பெயர் நாடுகளிலும் தமிழீழத்தில் கடைப்பிடிக்கப்படும் அத்தனை முறைகளும் மாவீரர்நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் மாவீரர்துயிலும் இல்லமும், கல்லறைகளும் செயற்கை முறைகளில் வடிவமைக்கப்பட்டு அதற்கென ஒரு மண்டபத்தில் வைத்து மாவீரர்கள் நினைவுகூரப்படுகிறார்கள். முன்னர் புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் மாவீரர்நாட்கள் அந்தந்த நாடுகளின் விடுமுறைகளோடு ஒட்டி, ஈழமக்களின் வசதிக்கேற்றபடி நாள் குறிக்கப்பட்டு நினைவுகூரப்பட்டது. தற்போது சில ஆண்டுகளாக அந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பெற்று மாவீரர்நாளானகார்த்திகை 27 நாளிலேயே அனேகமான புலம்பெயர் நாடுகளில் மாவீரர்நாள் நிகழ்கிறது.
மாவீரர் நாள் நிகழ்வுகளில்தமிழீழத் தேசியகொடியை ஏற்றிப் போற்றுதல் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. தமிழீழத் தேசியக் கொடி மாவீரர் குடும்ப உறுப்பினர்களால் ஏற்றப்படும். கொடியேற்றப்படும் போது புதுவை இரத்தினதுரையால் எழுதப்பெற்ற ஏறுது பார் கொடி ஏறுது பார்… என்ற உணர்வு மிக்க பாடல் ஒவ்வொரு முறையும் ஒலிக்க விடப்படும்.
மாவீரர் நாள் உறுதிமொழி
உலகத் தமிழர் அனைவரும் மாவீரர் நாளன்று தமிழ் மக்களைக் காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்கள் கண்ட தமிழீழக் கனவை நனவாக்கவும் அரும்பாடு படுவேன் என்றும் உறுதிக்கூறி கீழ்க்கண்ட உறுதிமொழியை எடுப்பார்கள்.

“மொழியாகி,
எங்கள் மூச்சாகி – நாளை
முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை
உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கு
துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்
தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி!”

ஈகைச்சுடரேற்றுதல்
தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. அதற்கும் காரணம் உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான லெப்டினன் சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது.

 

மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கௌரவிக்கப்பட்டார்கள். ஆரம்பத்தில் இந்தச் செயற்பாடு தமிழீழத்தில் மட்டுமே கடைப்பிடிக்கப் பெற்றது. அதற்குப் பிறகு வெளிநாடுகளிலும் இந்தக் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
ஒரு மாவீரனின் நினைவுச்சின்னம் எந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் உள்ளதோ அந்த இடத்துக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் (பெற்றோர்கள், உடன்பிறப்புகள்) அழைத்து வரப்பட்டு மாவீரர் வாரத்தின் மூன்று நாட்கள் அதற்குரிய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு கௌரவ விருந்தினர்களாகக் கவனிக்கப்பட்டனர்.
மாவீரர்நாள் உரை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் நாளில் உரைக்கப்பட்டது. இவ்வுரை தமிழீழத்தில் இருந்து ஆற்றப்பட்டாலும் உலகின் பல நாடுகளுக்கும் நேரடி ஒலிபரப்பாகவும், ஒளிபரப்பாகவும் எடுத்துச் செல்லப்பட்டது. இவ்வுரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பற்று கொண்டோர்களால் மட்டுமன்றி விடுதலையில் அக்கறை கொண்ட மற்றைய அமைப்பினர்களாலும், மாற்றுக் கருத்துக்கொண்ட அமைப்பினர்களாலும், விடுதலைப்போரையே வெறுப்பவர்களாலும், சாதாரண தமிழ் மக்களாலும், சிங்கள அரசினாலும் கூட மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு செவிமடுக்கப்பட்டது.தமிழர்களின் தேசியப்பூவாக கார்த்திகைபூ தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் திருநாளாம் மாவீரர் நாள் வருகின்ற திங்களில் கொடிபரப்பி பூத்துக் குலுங்குவதும், தமிழீழ தேசமெங்கும் பரவி முகிழ் விடுவதுமான கத்திகைப்பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே செங்காந்த மலர் என்றே அழைப்பர்.

2009இற்கு முந்தைய காலத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களின் மாவீரர் தின உரை மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது. சிறிலங்கா அரசு மாத்திரமின்றி உலகமும் அந்த உரையை கவனித்து வந்தது.2009இற்குப் பின்னர் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை இடம்பெறாது விட்டாலும் கூட தமிழ் ஈழ மக்கள் மாவீரர் தினம் வாயிலாக பெரும் செய்தியை அறிவித்து வருகின்றனர் என்பதே தமிழினத்தின்வெற்றியாகும்.
தமிழீழத்தில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 15 ஆண்டுகளை அண்மிக்கும் இன்றைய நாட்களில் இடம்பெறும் மாவீரர் நாளிலும் அதே காட்சியைக் காண முடிகிறது. அக்காட்சி இன்றைய ஈழத்தின் குரலாக, ஈழத்தின் செய்தியாக மிக முக்கியம் பெறுகிறது.
மாவீரர் தினத்தன்று மாலை மூன்று மணிக்கு மேல் மக்கள் மெல்ல மெல்ல துயிலும் இல்லங்களை நோக்கித் திரள்வார்கள். அதற்கு யாரும் அழைப்பு விடுவதில்லை. மக்கள் தன்னெழுச்சியாக துயிலும் இல்லத்திற்கு திரள வீதிகள் நெரிசலாகும்.
இன்றைய சூழலில் ஒரு பக்கம் இராணுவம். துப்பாக்கிளை ஏந்தியபடி கண்காணித்துக் கொண்டிருக்க, காவல்துறையினரும் அவதானித்தபடியிருக்க, மக்கள் துயிலும் இல்லத்தை நோக்கி திரண்டமையை நவம்பர் 27இன்று கண்டோம்.
தமிழர் தாயகத்தின் துயிலும் இல்லங்கள் பலவற்றில் அரசின் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட நிலையிலும் மக்கள் இவ்வாறு திரண்டார்கள் என்பது சொல்லுகிற செய்தி தமிழினத்தின்வெற்றி அல்லவா
2015இல் ரணில் பிரதமராக ஆட்சிக்கு வந்தவேளையில் அமைச்சரவைப் பேச்சளராக இருந்தார் ராஜித சேனாரத்தின. மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு எத்தனை பேர் வாறார்கள் என்பதை பார்க்கிறோம் என்றும் மக்கள் துயிலும் இல்லங்களுக்கு வரமாட்டார்கள் என்றும் கூறினார்கள். 2016ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் குறித்த முயற்சிகள் நவம்பர் 24ஆம் திகதியளவில் தான் இடம்பெற்றது.இலங்கை இராணுவத்தினர் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவ முகாம் அமைத்து தங்கியிருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் (2016) வெளியேறிய நிலையில் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒரு சில நாட்களில் மக்களின் திரட்சியுடன் துயிலும் இல்லம் முழுமையாக மாவீரர் நாளுக்கு ஏற்ற வகையில் தயாரானது.
அது மாத்திரமின்றி தமிழர் தாயகத்தில் உள்ள அத்தனை துயிலும் இல்லங்களும் மாவீரர் நாளுக்கு தயாரானது. சிறிலங்கா அரசின் முகத்தில் கரியை பூசும் வகையில், எங்கள் புலி வீரர்களுக்கு விழி நீரால் விளக்கேற்ற மக்கள் திரண்டார்கள். மாவீரர்களை குரலெடுத்து அழைத்த கண்ணீர் வெள்ளத்தாலும் வீரப் பாடல்களினாலும் மாவீரர் துயிலும் இல்லங்கள் ஒளிர்ந்தன. எந்த நிலை வந்தாலும் உங்கள் நினைவுகளை மறக்க மாட்டோம் என்பதை ஈழத் தமிழ் மக்கள் உலகிற்கு உணர்த்தினார்கள்
அத்துடன் விடுதலைப் புலிகளே எம் மண்ணின் பிள்ளைகள் என்பதையும் அவர்களை நினைவுகூர்வதன் வழியாக அவர்களின் தாகத்தையும் வலியுறுத்தி, ஈழத் தமிழ் மக்களின் சுதந்திர ஏக்கத்தையும் வெளிப்படுத்தினார்கள். மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புலிகள் காலத்தைபோலவே அதன் மரபுகளுடன் மாவீரர் நாளை அனுஷ்டித்து சிறிலங்கா அரசுக்கு மக்கள் பதில் அளித்தார்கள். தாய் நாட்டிற்காக்க இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்கள், மக்கள், அனைவருக்கும் எமது வீரவணக்கம்…..!
Tags: கார்த்திகை 27கொடுப்பார்கள்.தண்டனைமாவீரர் நாள்
ShareTweetShareShareSendSend
Previous Post

மரண அறிவித்தல்: அமரர் திரு இரத்தினவேல் வடிவேல் அவர்கள்

Next Post

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிரேக்க பிரதமருடன் கலந்துரையாடல்.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!
by கண்ணன்
21/01/2026
0

சென்னை: ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டக் களத்தில், காயமடைந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் உயிரைப் பணயம் வைத்து மருத்துவம் பார்த்த 'மருத்துவப் பிரிவு ' (Medical Wing) பற்றிய...

Read more

ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும்நிகழ்வு லண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா

by அரவிந்த்
21/01/2026
0

ஞானதீபம் கலைவிழா: ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும் நிகழ்வுலண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா ஈழத்தமிழர்கள் தமது கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டைப்...

Read more

கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள்- வலுக்கும் கண்டனம்

by அரவிந்த்
22/12/2025
0

தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரைக்கு முன் இடம்பெற்ற போராட்டத்தில்  நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதற்கு சைவ மகா சபை  கண்டனம்...

Read more

தமிழ்த்தேசிய பேரவை எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு!

தமிழ்த்தேசிய பேரவை எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு!
by Stills
19/12/2025
0

நேற்று வியாழக்கிழமை (18) தமிழக முன்னாள் முதலமைச்சரும்  தற்போதைய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான  சந்திப்பு அவரது இல்லத்தில் இரவு...

Read more

தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அவர்களின் 19-ம் ஆண்டு நினைவு நாள் – ஒரு வரலாற்றுப் பார்வை

தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அவர்களின் 19-ம் ஆண்டு நினைவு நாள் – ஒரு வரலாற்றுப் பார்வை
by கண்ணன்
15/12/2025
0

டிசம்பர் 14, 2025 தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தத்துவாசிரியரும், இராஜதந்திரியுமான 'தேசத்தின் குரல்' அன்டன் பாலசிங்கம் அவர்களின் 19-ம் ஆண்டு நினைவு நாள் இன்று...

Read more

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்
by Stills
30/07/2026
0

இயக்கப்பெயர்  :-பொட்டு அம்மான் சொந்தபெயர்    :-சண்முகநாதன் சிவசங்கர் பிறப்பு                  :- 28.நவம்பர்.1962 இறப்பு   ...

Read more
Next Post
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிரேக்க பிரதமருடன் கலந்துரையாடல்.!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிரேக்க பிரதமருடன் கலந்துரையாடல்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

30/07/2026
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

30/07/2026
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில்  சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

27/07/2026
நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

27/07/2026
மூட்டுவலியை போக்கும் உணவு

மூட்டுவலியை போக்கும் உணவு

27/07/2026
நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

24/07/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    47 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    43 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.