ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP 28இல் பங்கேற்க டுபாய் எக்ஸ்போ நகரிற்கு சென்றிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கிரேக்க பிரதமர் கிர்யாகோஸ் மிட்ஸுடாகிஸ் ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பு நேற்று நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் அவதானம் செலுத்தியிருந்ததோடு, ஆராயப்பட்டுள்ளது. விரைவில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கிரேக்க பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் அரச தலைவர்கள், அரச தனியார் துறை பிரதிநிதிகள், சூழலியலாளர்கள், புத்திஜீவிகள் பங்கேற்பதுடன், இந்த மாநாடு எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மூன்று யோசனைகளை இந்த மாநாட்டில் இலங்கை முன்வைக்கவுள்ளது.