Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இலங்கை

வடகிழக்கு உறவுகளுக்கு நீதி என்பது கானல் நீராகவே உள்ளது அருட்தந்தை மா.சத்திவேல்.!

Stills by Stills
27/02/2024
in இலங்கை
0
வடகிழக்கு உறவுகளுக்கு நீதி என்பது கானல் நீராகவே உள்ளது அருட்தந்தை மா.சத்திவேல்.!
0
SHARES
9
VIEWS
ShareTweetShareShareShareShare

இலங்கையில் நீதி என்பது கானல் நீராகவே உள்ளது. காணாமலாக்கப்பட்டோருக்கான காலத்தை இழுத்து அடித்து நீதியை மறுக்கும் செயற்பாடுகளையே அனைத்து ஆட்சியாளர்களும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை (27) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடகிழக்கில் அரச பாதுகாப்பு படைகளால் யுத்த காலப்பகுதியில் பலவந்தமாக கடத்தப்பட்டு காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் நீதி கேட்டு தொடர் போராட்டம் ஆரம்பித்து அதன் ஏழாவது நிறைவு தினத்திலே மீண்டும் ஒரு கவனயீர்ப்பு போராட்ட பேரணியை நடத்தி ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளருக்கு ஆறு அம்ச கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

இக் கோரிக்கைகள் நியாயமானது. உறவுகளை பறிகொடுத்த வலிகளோடு தொடர் போராட்டங்களை நடத்தி வரும் வடகிழக்கு காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் தமது முழுமையான ஆதரவை நடத்துவதோடு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை துரிதமாக நிறைவேற்றுமாறு ஐ.நா மனித உரிமை பேரவையை வலியுறுத்துகின்றது.

யுத்த காலத்தில் தமது உறவுகளை தேடி அலைந்த அவர்களின் உறவுகள் ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அமைப்பு ரீதியில் நீதி கேட்டு தலைநகர் உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் போராட்டங்களை நடாத்தியவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தன் உறவுகளை தேடி தேடித் மன வேதனைக்கு உட்பட்டவர்கள் பல்வேறு நோய் தாக்கத்தின் காரணமாகவும், வயது மூப்பினாலும், இரத்த உறவுகளின் பிரிவினாலும் இதுவரை 200க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

இதனை இயற்கை மரணம் என கடந்து விட முடியாது. இலங்கை அரசு நீதி மறுத்து இவர்களை கொலை செய்தது என்றே அடையாளப்படுத்தல் வேண்டும். இந்நிலை இனியும் தொடர சர்வதேச மனித உரிமை அமைப்புகளும்,ஐ.நா மனித உரிமை பேரவையும் இனியும் இடமளிக்கக் கூடாது என்பது எமது உருக்கமானதும் அளுத்தமானதுமான வேண்டுகோள்.

ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டு 15 ஆண்டுகளை கடந்து கொண்டிருக்கின்ற நிலையிலும் வலிந்து காணமலாக்கப்பட்டோருக்கான நீதி என்பது கானல் நீராகவே உள்ளது. இது விடயம் தொடர்பில் அரசின் செயற்பாடுகளில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கும், தமிழர்களுக்கும் மட்டுமல்ல வடகிழக்கிற்கு வெளியே நீதி மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் நம்பிக்கை இல்லை. காலத்தை இழுத்து அடித்து நீதியை மறுக்கும் செயற்பாடுகளையே அனைத்து ஆட்சியாளர்களும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைத்தல் வேண்டும்.

இலங்கையில் நிகழ்ந்த பல்வேறு பாரதூர சம்பவங்கள் தொடர்பில் ஆழ ஆராய்ந்து அதன் உண்மையை கண்டறிவதற்கும், நீதியை நிலை நாட்டுவதற்கும், அவ்வாறான நிகழ்வுகள் மீழ் நிகழ்வதை தடுப்பதற்கு என 1956 லிருந்து இதுவரை 36 வரை ஆணை குழுக்கள் அமைக்கப்பட்ட போதும் அவ் ஆணை குழுக்களின் அறிக்கைகள் முழுமையாக மக்கள் முன் வைக்காது மறைக்கவே ஆட்சியாளர்கள் முயற்சித்துள்ளனர். அது மட்டுமல்ல அவ் ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கும் எந்த ஒரு ஆட்சியாளருக்கும் துணிவு இருக்கவில்லை.காரணம் உண்மையை மூடி மறைத்து அரசியல் குளிர் காய்வதே அவர்களின் நோக்கம்.

அவ்வாறே யுத்தம் முடிவற்றதன் பின்னர் காணமலாக்கப்பட்டோர் தொடர்பிலும் பல்வேறு ஆணை குழுக்கள் நியமிக்கப்பட்டன.அவ் ஆணைக்குழுக்கள் நியாயமான பரிந்துரைகளை முன் வைத்த போதும் அதனை நிறைவேற்றுவதற்கு ஆட்சியாளர்கள் துணியவில்லை.

தொடர்ந்தும் சர்வதேசத்தின் கண்களில் மண்ணை தூவி உள்நாட்டு பொறிமுறையின் கீழ் நீதியை நிலைநாட்டப் போவதாக அறிவிக்கலாம். இதற்கு வலிந்து காணாமலாக்கட்ட உறவுகளின் அமைப்போ நாமோ உடன்பட போவதில்லை என உரத்து கூறுகின்றோம். ஆதலால் இச்சந்தர்ப்பத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்பால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும், ஐ.நா மனித உரிமை பேரவைக்கு அளுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும், இலங்கை ஆட்சியாளர்கள் பெற்றுக் கொடுக்கப் போவதாக கூறப்படுகின்ற உதவிகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக தேவையை நிறைவேற்றலாமே தவிர அதன் மூலம் எதிர்பார்க்கும் நீதியை அடைய முடியாது என்பதே உண்மை. எனவே சர்வதேச உதவி அமைப்புகளும்,நலன் விரும்பிகளும் வலிகளோடு வாழும் உறவுகளின் அமைப்பால் ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையாளருக்கு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்கின்றோம்.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் விடயத்திலும், யுத்த காலத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திலும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ,ஐ. நா மனித உரிமை பேரவையும் இலங்கை ஆட்சியாளர்களை இனியும் நம்பக் கூடாது என்பதோடு எனது வாலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அவசர உடனடி நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டும் என ஐநா மனித உரிமை பேரவையிடம் வேண்டிக் கேட்டுக் கொள்வதோடு யுத்த குற்றவாளிகளை அடையாளம் கண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வழிவகுக்குமாறும் தமிழர்கள் மீது தொடர்ந்து முன்னெடுக்கும் இன அழிப்பினை சர்வதேசம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது என்பது அதனை அங்கீகரிப்பதாக அமைந்து விடுமாதலால் ஆதலால் அதனை தடுப்பதற்கு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

Tags: வடகிழக்குஉறவுகளுக்குநீதிஎன்பதுகானல் நீர்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

இலங்கை கடற்படைக்கு கொழும்பில் காணி குத்தகைக்கு.!

அடுத்த செய்தி

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

“டிட்வா”புயல்பற்றி இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம் திரிபுப்படுத்தப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளது நளிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டு.

“டிட்வா”புயல்பற்றி இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம் திரிபுப்படுத்தப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளது நளிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டு.
by Stills
16/12/2025
0

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்பில் தனியார் தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது "டிட்வா" சூறாவளி பற்றி இந்தியா காலநிலை திணைக்களம் இலங்கைக்கு முன்னறிவித்தல்களை விடுக்கவில்லை. இந்திய...

மேலும்...

கற்றன் நசனல் வங்கி 100 மில்லியன் ரூபா நிதியை நன்கொடை!

கற்றன் நசனல் வங்கி 100 மில்லியன் ரூபா நிதியை நன்கொடை!
by Stills
16/12/2025
0

செவ்வாய்க்கிழமை (16) இன்று கற்றன் நசனல் வங்கி(Hatton National bank) 100 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளது. டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின்  அன்றாட வாழ்க்கையையும்,...

மேலும்...

கடற்றொழில் அமைச்சர் மீனவர்களை இந்திய தூதரகத்துக்கு எதிராக தூண்டிவிட்துள்ளார் – சபா குகதாஸ் குற்றச்சாட்டு!

கடற்றொழில் அமைச்சர் மீனவர்களை இந்திய தூதரகத்துக்கு எதிராக தூண்டிவிட்துள்ளார் – சபா குகதாஸ் குற்றச்சாட்டு!
by Stills
16/12/2025
0

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ் மாவட்ட ரெலோ அமைப்பாளர் சபா குகதாஸ் அவர்கள் கடற்தொழில் அமைச்சர் மீனவர்களை தூண்டிவிட்டு இந்திய தூதரகத்திற்கு எதிராக போராட்டம் செய்யுமாறு...

மேலும்...

தமிழர்களை “வெட்டித் துண்டு துண்டாக வீசுவேன்” – தேரரின் புதிய அவதாரம்

தமிழர்களை “வெட்டித் துண்டு துண்டாக வீசுவேன்” – தேரரின் புதிய அவதாரம்
by கண்ணன்
16/12/2025
0

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் (Ampitiya Sumanarathana Thero) என்பவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு, மங்களாராம விகாரையின் தலைமை பௌத்த பிக்கு ஆவார். இவர்...

மேலும்...

‘டிட்வா’ புயல் மற்றும் கனமழை – இலங்கையில் பலி எண்ணிக்கை 627-ஐ எட்டியது; மீண்டும் நிலச்சரிவு எச்சரிக்கை!

‘டிட்வா’ புயல் மற்றும் கனமழை –  இலங்கையில் பலி எண்ணிக்கை 627-ஐ எட்டியது; மீண்டும் நிலச்சரிவு எச்சரிக்கை!
by கண்ணன்
10/12/2025
0

இலங்கையைத் தாக்கிய 'டிட்வா' புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக, அந்த நாடு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான...

மேலும்...

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!
by அரவிந்த்
09/09/2025
0

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்றஇந்திய மத்திய அரசின் அறிவிப்புமகிழ்சிக்குரியது! தமிழ்நாட்டிலிருந்து சிரஞ்சீவி மாஸ்டர் சிறப்புப் பேட்டி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழர்கள் சட்டரீதியாக வாழ்வதற்கான அனுமதியை இந்திய...

மேலும்...
அடுத்த செய்தி
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

06/12/2025
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
“டிட்வா”புயல்பற்றி இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம் திரிபுப்படுத்தப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளது நளிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டு.

“டிட்வா”புயல்பற்றி இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம் திரிபுப்படுத்தப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளது நளிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டு.

16/12/2025
கற்றன் நசனல் வங்கி 100 மில்லியன் ரூபா நிதியை நன்கொடை!

கற்றன் நசனல் வங்கி 100 மில்லியன் ரூபா நிதியை நன்கொடை!

16/12/2025
கடற்றொழில் அமைச்சர் மீனவர்களை இந்திய தூதரகத்துக்கு எதிராக தூண்டிவிட்துள்ளார் – சபா குகதாஸ் குற்றச்சாட்டு!

கடற்றொழில் அமைச்சர் மீனவர்களை இந்திய தூதரகத்துக்கு எதிராக தூண்டிவிட்துள்ளார் – சபா குகதாஸ் குற்றச்சாட்டு!

16/12/2025
தமிழர்களை “வெட்டித் துண்டு துண்டாக வீசுவேன்” – தேரரின் புதிய அவதாரம்

தமிழர்களை “வெட்டித் துண்டு துண்டாக வீசுவேன்” – தேரரின் புதிய அவதாரம்

16/12/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us