Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு விளையாட்டு

ஜெய்ஸ்வால்: மேற்கிந்தியத் தீவுகளை மிரள வைத்த இளைஞன்

Stills by Stills
14/07/2023
in விளையாட்டு
1
ஜெய்ஸ்வால்: மேற்கிந்தியத் தீவுகளை மிரள வைத்த இளைஞன்
0
SHARES
3
VIEWS
ShareTweetShareShareShareShare

இளம் வீரர் ஜெய்ஸ்வால், கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரின் அபாரமான சதத்தால் டோமினிக்காவில் நடந்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வலுவான முன்னிலையை நோக்கி நகர்ந்துள்ளது.

2வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 113 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் குவித்து 162 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்குள் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

அறிமுக டெஸ்டில் களமிறங்கிய ஜெய்ஸ்வால் 143 ரன்களுடனும், விராட் கோலி 36 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

ஜெய்ஸ்வால் சாதனை சதம்

அறிமுக ஆட்டத்திலேயே தொடக்க வீரராக களமிறங்கி சதம் அடித்த 3வது இந்திய பேட்டர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார். இதற்கு முன் பிரித்வி ஷா, ஷிகர் தவண் பெற்றிருந்தனர். ஒட்டுமொத்தத்தில் அறிமுக ஆட்டத்திலேயே சதம் அடித்த 17-வது இந்திய பேட்டராக ஜெய்ஸ்வால் இடம் பெற்றார்.

இந்தியாவுக்கு வெளியே அறிமுகப் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த பேட்டராக செளரவ் கங்குலி இருந்து வந்தார். கடந்த 1996ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் கங்குலி அடித்த 131 ரன்கள்தான் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை ஜெய்ஸ்வால் 27 ஆண்டுகளுக்குப்பின் முறியடித்து, 143 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடி வருகிறார். ஆசியாவுக்கு வெளியே கங்குலிக்கு அடுத்தபடியாக, அறிமுக ஆட்டத்தில் சதம் அடித்த வீரராக ஜெய்ஸ்வால் இடம் பெற்றார்.

ஜெய்ஸ்வால் 2வது நாள் ஆட்ட இறுதிவரை 350 பந்துகளைச் சந்தித்து 143 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அறிமுக டெஸ்ட் போட்டியில் ஒரு இந்திய பேட்டர் இந்த அளவு அதிகமான பந்துகளைச் சந்தித்தது இதுதான் முதல்முறையாகும்.இதற்கு முன் கடந்த 1984ம் ஆண்டில், ஈடன் கார்டனில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அசாருதீன் அறிமுக ஆட்டத்தில் 322 பந்துகளைச் சந்தித்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. அதையும் ஜெய்ஸ்வால் முறியடித்துவிட்டார்.

ரோஹித், ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்

ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 229 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதாவது, விக்கெட் இழப்பின்றி முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 79 ரன்கள் முன்னிலை பெற்றபின் ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்தியா முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி, முன்னிலை பெற்றதும் இதுதான் முதல்முறையாகும். இதற்கு முன் கடந்த 1978ம் ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சுனில் கவாஸ்கர், சவுகான் இருவரும் முதல் இன்னிங்ஸில் 97 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. அதை ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் முறியடித்துவிட்டனர்.

அது மட்டுமல்லாமல் ஆசியக் கண்டத்துக்கு வெளியே, இந்திய அணியின் தொடக்க ஜோடி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரும் இதுதான். இதற்கு முன் கடந்த 1979ம் ஆண்டு ஓவலில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சுனில் கவாஸ்கர், சவுகான் ஜோடி 213 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் தொடக்க ஜோடி

இந்தியாவுக்கு வெளியே சேர்த்த 3வது அதிகபட்சமாக இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய தொடக்க ஜோடி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரும் இதுவாக அமைந்தது. இதற்கு முன் கடந்த 2002 வான்ஹடேவில் நடந்த டெஸ்டில் சேவாக், சஞ்சய் பங்கர் ஜோடி 201 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்து.

ShareTweetShareShareSendSend
முன் செய்தி

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

அடுத்த செய்தி

முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸை சுருட்டிய இந்தியா – அஸ்வின் அரிய சாதனை

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் நரேந்திரமோடி தந்த ரியாக்சன்…. நடந்தது என்ன?

பிரதமர் நரேந்திரமோடி தந்த ரியாக்சன்…. நடந்தது என்ன?
by Stills
20/11/2023
0

13 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரில் 19 ஆம் திகதி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற    இறுதிப் போட்டியில்  இந்திய அணியை வெற்றி கொண்டு ஆறாவது தடவையாக ...

மேலும்...

12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இங்கிலாந்து சம்பியன்!.

12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இங்கிலாந்து சம்பியன்!.
by Stills
05/10/2023
0

48 வருட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் பவுண்டறிகளின் எண்ணிக்கை அடிப்படையில் சம்பியன் பிரகடனப்படுத்தப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.இங்கிலாந்திலும் வேல்ஸிலும் கூட்டாக நடத்தப்பட்ட 12ஆவது உலகக் கிண்ண...

மேலும்...

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சொல்லி அடித்த கில்லி.

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சொல்லி அடித்த கில்லி.
by Stills
02/10/2023
0

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த செப். 23-ஆம் தேதி தொடங்கியது. அக்டோபர் 8 வரை நடைபெறும். 61 பிரிவுகளில் நடைபெறும் 40...

மேலும்...

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம் இடம்பெற்றதா? : முன்னாள் அணித்தலைவர் அர்ஜுண கிளப்பும் சந்தேகங்கள்.

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம் இடம்பெற்றதா? : முன்னாள் அணித்தலைவர் அர்ஜுண கிளப்பும் சந்தேகங்கள்.
by Stills
23/09/2023
0

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுண ரணதுங்க. இறுதிப்போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமை தமக்கு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும் புரவெசி பலய என்ற...

மேலும்...

இந்திய கால்பந்து அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ப்பு!

இந்திய கால்பந்து அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ப்பு!
by Stills
17/09/2023
0

9 ஆண்டுகளுக்குப் பின் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் அணி பங்கேற்கிறது. சுனில் சேத்ரி தலைமையில் 17 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின்...

மேலும்...

பிரீமியர் லீகுக்குள் நுழையுமா? லெஸ்டர் சிட்டி.!

பிரீமியர் லீகுக்குள் நுழையுமா? லெஸ்டர் சிட்டி.!
by Stills
17/09/2023
0

லெஸ்டர் சிட்டி - இங்கிலாந்தைச் சேர்ந்த கால்பந்து கிளப். 8 ஆண்டுகளுக்கு முன் அந்த அணி அவ்வளவு பிரபலமானது இல்லை. பிரீமியர் லீகில் நிலைத்திருப்பதே அவர்களுக்கு ஒவ்வொரு...

மேலும்...
அடுத்த செய்தி
முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸை சுருட்டிய இந்தியா – அஸ்வின் அரிய சாதனை

முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸை சுருட்டிய இந்தியா - அஸ்வின் அரிய சாதனை

கருத்துகள் 1

  1. Admin says:
    2 years ago

    வணக்கம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?

முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?

13/06/2025
தியானத்தின் நன்மைகளும் பயன்களும்.!

தியானத்தின் நன்மைகளும் பயன்களும்.!

13/06/2025
தமிழர்கள் திருமண முறை

தமிழர்கள் திருமண முறை

12/06/2025
குளோபல் சௌத் மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியாவின் உரை.!

குளோபல் சௌத் மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியாவின் உரை.!

12/06/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us