வல்வையின் ஒரு சகாப்தம்
மறைந்தது* ……..
ஒரு தாய்ப்போராளியின்
குரல் ஓய்ந்தது…..🙏🙏🙏
இந்திய இராணுவம் வல்வெட்டித்துறையை சல்லடை போட்ட காலப்பகுதி அது. எந்த நேரம் எந்த வீட்டிற்குள் இராணுவம் புகுந்து யாரை
கொல்லும் என்ற தெரியாத கொடூர நிமிடங்கள்…..
எங்கள் விடுதலைப் போராளிகள் அந்த கடுமையான காலத்திலும் வல்வையில் தங்கள் கடமைகளை செய்தபடி இருந்தனர்.
அன்றும் கிண்ணியம்மா வீட்டில் ஒரு போராளி வருகின்றான். எந்த புலி வந்தாலும் அரவணைத்து ஆறுதல் படுத்தி
குளிச்சு சாப்பிடனை என்று கூறிவிட்டு
தானும் வீட்டு வாசலில் காவலிருந்து எங்களையும் தெருவில் நின்று விளையாடியபடி கண்காணிக்க சொல்லுவா. அன்று வீட்டுக்கு வந்த சலாமண்ணை ( மேஜர் சலாம் , சின்னக்குட்டி நல்லராசன்
இமையாணன், உடுப்பிட்டி) சாப்பிட்டு விட்டு
வெளியேற எத்தனித்த போது வீட்டிற்குள் புகுந்த ipkf ஜ கண்டு மதிலேறி தப்ப எத்தனித்து முடியாமல் சயனைட் அருந்தி வீரச்சாவை தழுவிக்கொண்டார்.
அவரை உயிருடன் பிடிக்க முடியாமல் போன இந்திய இராணுவத்தின் கோபமும் வெறியும் அம்மம்மாமேல் பாய்ந்தது.
கிண்ணியம்மாவையும் மகளையும் அடித்து துன்புறுத்தி கைது செய்தனர். இப்படியான துன்பங்களை கடந்தாலும் தான் கொண்ட கொள்கையிலும் போராளிகள் மேல் வைத்த பாசத்திலும் எந்த மாற்றத்தையும் காட்டாது இருந்தார்.
அன்னையின் இரண்டாவது மகன் சிறீதரன் ( மேஜர் பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து போராட்டத்தில் இணைந்து 1987 ஆண்டு ஏப்ரல் இரண்டாம் திகதி வீரமரணத்தை தழுவிக்கொண்டார்.
அடுத்து நான்காவது மகன் ரவீந்திரன் மேஜர் கிண்ணி அவரும் 1992 ஆண்டு யூலை பத்தாம் திகதி வீரமரணத்தை
தழுவிக்கொண்டார்.
ஆனாலும் இறுதிவரை எந்த
போராளிகளையும் தனது பிள்ளைகள் போல எண்ணி அரவணைத்து உணவளித்தவர். இவரது கலகலப்பான பேச்சும்
அன்பான உச்சரிப்பும் தமது தாயாக நினைத்து கொண்டாடினர் புலிவீரர்கள்.
முள்ளிவாய்க்கால் வரை போராட்டத்தோடு இணைந்து வாழ்ந்து பின்பு தான்பிறந்த மண்ணில் வாழ்ந்து இன்று தனது பிள்ளைகளோடு சென்று இணைந்து கொண்ட கிண்ணியம்மாவிற்கு எமது
வீரவணக்கம்.🙏