Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result

பெண்ணைச் சீரழித்த இந்தியர்க்கு 16 ஆண்டுச் சிறை, 12 பிரம்படிகளும் சிங்கப்பூர் நீதிமன்றம் .

Stills by Stills
02/11/2023
in உலகம்
0
பெண்ணைச் சீரழித்த இந்தியர்க்கு 16 ஆண்டுச் சிறை, 12 பிரம்படிகளும் சிங்கப்பூர் நீதிமன்றம் .
0
SHARES
11
VIEWS
ShareTweetShareShareShareShare

2019ஆம் ஆண்டு மே4ஆம் தேதி பின்னிரவில் அரங்கேறியஅந்தப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம். கிராஞ்சியிலுள்ள காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்று, 23 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த துப்புரவாளர்க்கு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 16 ஆண்டுச் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதித்தது.

அப்போது, பல்கலைக்கழக மாணவியாக இருந்த அப்பெண், சம்பவ நாளன்று சாங்கியிலுள்ள தமது கல்வி நிலைய வளாகத்திற்குத் திரும்பும் போது தவறான ரயிலில் ஏறிவிட்டார். கிராஞ்சி ரயில் நிலையத்தில் இறங்கிய அவர், பின்னர் பேருந்தில் ஏறி அங்கு செல்லத் திட்டமிட்டார்.

பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது கைப்பேசி வழியாக அவருக்கும் அவருடைய காதலர்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பேருந்து நிறுத்தத்தில் பலர் இருந்ததால், தனிமை நாடி அடுத்த பேருந்து நிறுத்தத்திற்குச் செல்லலாம் என முடிவுசெய்து அவர் நடக்கத் தொடங்கினார்.

ஆனால், சுற்றுப்புறத்தைக் கவனிக்காமலேயே 10-15 நிமிடங்களுக்கு நடந்துவிட்டார். அப்போது அவரை நெருங்கிய சின்னையா கார்த்திக் என்ற 26 வயது இந்திய ஆடவர், எதுவும் பிரச்சினையா என்று கேட்டார். அதற்கு, ஒரு பிரச்சினையும் இல்லை என்ற அப்பெண், தன்னைத் தனித்திருக்கவிட்டு விலகிச் செல்லுமாறு அவரிடம் சொன்னார்.

பின்னர் அப்பெண் ரயில் நிலையத்தை நோக்கி நடக்க முயன்றதும், அவரது கையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளினார் கார்த்திக். அவ்விடம் ரயில் நிலையத்தைவிட்டு தள்ளி இருந்தது.கார்த்திக் முணுமுணுத்தது புரியாதபோதும் அவர் காட்டிய வழியில் அப்பெண் நடக்கத் தொடங்கினார்.

சிறிது நேரம் கழித்தே அவர் தன்னைப் பின்தொடர்வதை அப்பெண் உணர்ந்தார். அதுபற்றி அவர் தன் காதலனிடம் சொன்னார். அங்கிருந்து அகன்று, திறந்தவெளிக்குச் சென்று, டாக்சி பிடிக்க முயலுமாறு அப்பெண்ணின் காதலர் அவரை வலியுறுத்தினார். ஆனால், அருகில் திறந்தவெளியும் இல்லை, சாலையில் ஆள்நடமாட்டமும் இல்லை.அப்பெண் சாலையைக் கடக்க முயன்றபோது, சாலையின் நடுவில் அவரைப் பிடித்த கார்த்திக், அவரின் முகத்தில் குத்துவிட்டார்.

கைப்பேசி வழியே அப்பெண்ணின் அலறல்களை அவருடைய காதலர் கேட்க முடிந்தது. பின்னர் அழைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர், அவர் அப்பெண்ணின் அறைத்தோழியை அழைத்து விவரம் சொல்ல, அத்தோழி காவல்துறையிடம் தகவல் தெரிவித்தார்.

இதனிடையே, கார்த்திக் அப்பெண்ணைப் பலமுறை தாக்க, அவர் அணிந்திருந்த கண்ணாடி கீழே விழுந்தது.பிறகு கார்த்திக் தன் கைகளால் அப்பெண்ணின் கழுத்தை இறுகப் பிடித்தபடி, அவரைக் காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்றார். அங்கு அவர் அப்பெண்ணை சீரழித்துவிட்டு, அங்கிருந்து அகன்றார்.அதன்பின் தன் கைப்பேசியைக் கண்டுபிடித்து, தன் காதலனிடம் நடந்தவற்றைச் சொன்னார் அப்பெண்.

அங்கிருந்து சாலைப் பகுதிக்குத் திரும்பிய அவர், பின்னிரவு 2.05 மணியளவில் காவல்துறை வரும்வரை, ஓரிடத்தில் அமர்ந்து அழுதவாறே இருந்தார்.அப்பகுதியிலிருந்த கண்காணிப்புப் படக்கருவிகளை ஆராய்ந்த காவல்துறை, கார்த்திக் அப்பெண்ணைக் கிட்டத்தட்ட 15 நிமிடங்களாகப் பின்தொடர்ந்ததைக் கண்டறிந்தனர். இரவு 1.32 மணியளவில் சிங்கப்பூர் டர்ஃப் கிளப் அவென்யூவில் சென்றபோது அவர்கள் மறைந்துபோயினர். பிறகு 1.48 மணியளவில் காட்டுப்பகுதியிலிருந்து ஆடை கலைந்த நிலையில் அப்பெண் வெளிப்பட்டது காணொளியில் தெரிந்தது.

அருகிலிருந்த தங்குவிடுதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் விசாரித்த காவல்துறையினர், மறுநாள் மே 5ஆம் தேதி கார்த்திக்கைப் பிடித்தனர்.கார்த்திக் அப்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கி, முகத்தைக் காயப்படுத்தியதால், மருத்துவமனைக்குச் சென்றபோது, அப்பெண்ணின் காதலராலே முதலில் அவரை அடையாளம் காண முடியவில்லை எனக் கூறப்பட்டது.

சம்பவம் நிகழ்ந்து நாலாண்டுகளாகிவிட்டபோதும் அதனால் அப்பெண் இன்னும் உணர்வு, மனம் சார்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.அவமானம் எனக் கருதி, தனக்கு நிகழ்ந்த கொடுமை குறித்து இன்னும் தன் குடும்பத்தாரிடம் எதுவும் கூறாத அப்பெண், அவ்வப்போது தனியாக அமர்ந்து அழுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Tags: 16 ஆண்டுச் சிறை2019ஆம் ஆண்டுஇந்தியர்சிங்கப்பூர்நீதிமன்றம்
ShareTweetShareShareSendSend
Previous Post

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

Next Post

தொடரும் வருமானவரித்துறை ரெய்டு.. அமைச்சர் எ வ வேலு இப்போது எங்கே?

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும்நிகழ்வு லண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா

by அரவிந்த்
21/01/2026
0

ஞானதீபம் கலைவிழா: ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும் நிகழ்வுலண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா ஈழத்தமிழர்கள் தமது கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டைப்...

Read more

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பெருமிதம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பெருமிதம்
by Stills
21/01/2026
0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன். கம்போடியா , தாய்லாந்து இடையே பேச்சுவார்த்தை...

Read more

ஷெரீப் உஸ்மான் ஹாடியின் மரணம்:வங்கதேசத்தில் பதற்றம் …

ஷெரீப் உஸ்மான் ஹாடியின் மரணம்:வங்கதேசத்தில் பதற்றம் …
by கண்ணன்
20/12/2025
0

கடந்த சில நாட்களாக வங்கதேசத்தில் அரசியல் சூழல் மிகவும் மோசமடைந்துள்ளது. குறிப்பாக, மாணவர் அமைப்புகளுக்கும் தற்போதைய இடைக்கால அரசுக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், வன்முறைச் சம்பவங்கள்...

Read more

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக 45 ஆண்டுகளாக இயங்கிய 45 அகதி முகாம்கள் மூடல்… காரணம்?

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக 45 ஆண்டுகளாக இயங்கிய 45 அகதி முகாம்கள் மூடல்… காரணம்?
by கண்ணன்
18/12/2025
0

பாகிஸ்தானில் சுமார் 40 முதல் 45 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த 42 ஆப்கானிய அகதிகள் முகாம்களை (Afghan Refugee Camps) மூடுவதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ள செய்தி,...

Read more

ஜெய்சங்கர் – நெதன்யாகு சந்திப்பு: காசா அமைதித் திட்டத்திற்கு இந்தியா ஆதரவு……

ஜெய்சங்கர் – நெதன்யாகு சந்திப்பு: காசா அமைதித் திட்டத்திற்கு இந்தியா ஆதரவு……
by கண்ணன்
17/12/2025
0

டிசம்பர் 16-17, 2025 தேதிகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுளார். ஜெருசலேமில் நடைபெற்ற இச்சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய உறவை...

Read more

உக்ரைன் – நேட்டோ: போர் நிறுத்தத்திற்காக நேட்டோ கனவை கைவிடத் தயார் – ஜெலன்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு

உக்ரைன் – நேட்டோ: போர் நிறுத்தத்திற்காக நேட்டோ கனவை கைவிடத் தயார் – ஜெலன்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு
by Stills
15/12/2025
0

ரஷ்யாவுடனான நீண்ட காலப் போரை முடிவுக்குக் கொண்டுவர, உக்ரைன் தனது முக்கிய இலக்கான 'நேட்டோ' (NATO) அமைப்பில் இணைவதை தற்காலிகமாக கைவிடத் தயார் என்று உக்ரைன் அதிபர்...

Read more
Next Post
தொடரும் வருமானவரித்துறை ரெய்டு.. அமைச்சர் எ வ வேலு இப்போது எங்கே?

தொடரும் வருமானவரித்துறை ரெய்டு.. அமைச்சர் எ வ வேலு இப்போது எங்கே?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us