Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result

திருமலை பட்டணமும் சுழலும் 5,226 ஏக்கர் நிலம் துறைமுக அதிகார சபை வசம் – குகதாசன் எம்.பி

Stills by Stills
08/03/2025
in இலங்கை
0
திருமலை பட்டணமும் சுழலும் 5,226 ஏக்கர் நிலம் துறைமுக அதிகார சபை வசம் – குகதாசன் எம்.பி
0
SHARES
6
VIEWS
ShareTweetShareShareShareShare

திருமலை பட்டணமும் சுழலும் 5,226 ஏக்கர் நிலம் துறைமுக அதிகார சபை வசம் – குகதாசன் எம்.பி நேற்று வெள்ளிக்கிழமை (7) நடைபெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின்    போக்குவரத்து  நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்  சிவில்  விமான சேவைகள் மற்றும்  நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி  ஆகிய  அமைச்சுக்கள்  மீதான  குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் இலங்கைத் துறைமுக அதிகார சபையானது திருமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 11 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 5,226 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வைத்துள்ளது. இதில் 1882 ஏக்கரில் மக்கள் நீண்ட காலமாக வாழ்கின்றார்கள்.  துறைமுக அதிகார சபையிடம் இருந்து அதை விடுவிக்க வேண்டு மென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். குகதாசன் வலியுறுத்தினார்

திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் மாகாண மற்றும் உள்ளூராட்சி திணைக்களத்தின் கீழ் வரும் முதன்மையான வீதிகள் உள்ளக வீதிகள் மிகவும் மோசமான நிலையில் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. எனவே  இதனை மறுசீரமைக்க   வேண்டும்.திருகோணமலை மாவட்டத்தில்  பாலங்களும் பழுதடைந்துள்ளன. இவை நீண்ட காலத்துக்கு முன்னர் கட்டப்பட்டவையாகும். எடுத்துக்காட்டாக மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் கட்டைபறிச்சான் பாலம் ( கருப்பு பாலம் ) மற்றும் இறால் பாலம் என்பன முழுமையாகச் சேதமடைந்து காணப்படுகின்றன . இவற்றைச் சீரமைக்காவிட்டால் உயிர்ச் சேதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றைப் புதிதாக அமைக்க  வேண்டும்.

அதேபோன்று வெருகல் பிரதேசத்தில், ஏரிக்கும் கடலுக்கும் இடையில் சுமார் 5000 மக்கள் வாழ்கின்றனர். பேரிடர் காலங்களில், மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கி மரணத்தை சந்திக்கக் கூடிய வாய்ப்பு உண்டு . இவ்வாறான விளைவுகளைத் தடுக்க ஏரியின் மீது பாலம் அமைக்க வேண்டும்.திருகோணமலை , முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடையில் கொக்கிளாய் ஏரி உள்ளது.

இது ஒர் ஆழமற்ற ஏரி . புல்மோட்டையில் வாழும்  மக்கள் கொக்கிளாய் ஏரி வழியாக 32 கிலோமீட்டர் பயணித்தால் முல்லைத்தீவை சென்றடையலாம். பாலம் இல்லாததால் மக்கள் வவுனியா வரை சுற்றிச் சென்று 75 கிலோமீற்றர் அதிகமாக பயணித்து முல்லைத்தீவுக்கு செல்ல வேண்டியுள்ளது. இது பணச் செலவையும் நேரச் செலவையும் ஏற்படுத்துகிறது. எனவே கொக்கிளாய் ஏரியின் மீது பாலம் அமைக்க வேண்டும்.

திருகோணமலை மாவட்டத்தின் முதன்மையான வளமாக காணப்படுவது அதன் இயற்கை துறைமுகம். ஆனால் சுதந்திரத்திற்கு பின் ஆட்சிக்கு வந்த அரசுகள் இந்த துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதில் பெரிய அக்கறை காட்டவில்லை.திருகோணமலை துறைமுகத்தின் உள்ளே  4 இறங்கு துறைகள் உள்ளன . அவற்றில் ஒன்று அஷ்ரப் இறங்கு துறை.இது இலங்கைத் துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டில் உள்ளது. எஞ்சிய மூன்று இறங்கு துறைகளில் ஒன்று பிறிமா மா ஆலையும் மற்றொன்றை டோக்கியோ சீமேந்து ஆலையும் பிறிதொன்றை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனமும் பயன்படுத்துகின்றன.

அஸ்ரப் இறங்கு துறையில்  தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைகளுடன் மாத்திரம் இன்று வரை ஆளணி பற்றாக்குறை , போதிய கப்பல் தரிப்பிட வசதியின்மை போதிய சரக்கு களஞ்சிய வசதியின்மை சரக்கு ஏற்றி இறக்கும் கனரக இயந்திரங்கள்  இன்மை, முறையான வாகன ஓடுதளம் இன்மை  குறைபாடுகளோடு காணப்படுகின்றது.இதன் காரணமாக இங்கு வரவேண்டிய கடற் கலங்களுக்கு சிறந்த சேவை கிடைப்பதில்லை.

இதனால் அவை வேறு துறைமுகங்களை நாடிச் செல்கின்றன. இதன் விளைவாக நமக்கு பாரிய வருவாய் இழப்பு ஏற்படுகின்றது. துறைமுகத்தில் உள்ள குறைபாடுகளை சீர் செய்வதன் மூலம் கணிசமான அந்நிய நாணயமாற்று வருவாய் ஈட்ட முடியும்.  மூன்று நிறுவனங்கள் பயன்படுத்தும் மூன்று இறங்கு துறைகளையும் இலங்கைத் துறைமுக அதிகார சபையே  நிருவகித்தால் கூடுதல் வருவாயினை நாட்டுக்கு ஈட்ட முடியும் என்பதோடு வேலை வாய்ப்புகளையும் வழங்க முடியும்.

துறைமுகத்தை அண்டியுள்ள எண்ணெய்க் குதங்களில் பத்து வீதத்துக்கும் குறைவானவையே பயன்பாட்டில் உள்ளன. ஏனையவற்றையும் பயன் பாட்டுக்கு கொண்டு வந்தால்இ இந்துமா கடலில் பயணம் செய்கின்ற கடற் கலங்களுக்கு எரிபொருள் வழங்கி பெருமளவு அந்நிய நாணய மாற்றினை ஈட்டுவதோடு வேலை வாய்ப்பினையும் வழங்கலாம்.

இலங்கைத் துறைமுக அதிகார சபையானது பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 11 கிராம சேவையாளர் பிரிவில் அடங்கும் 5226 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வைத்துள்ளது. இதில் 1882 ஏக்கரில் மக்கள் நீண்ட காலமாக வாழ்கின்றார்கள். எனவே துறைமுக அதிகார சபையிடம் இருந்து அதை விடுவித்து அதில் வாழும் மக்களுக்கு வழங்க  வேண்டும்.

இ.போ. சபையின்  திருகோணமலை மாவட்ட அலுவலகத்திற்கு 37 பஸ் கள் தேவை. எனினும் 20 பஸ்கள் மட்டுமே அதனிடம் உள்ளன. இதனால் இ. போ.சபையானது சிறந்த சேவையை வழங்க முடியாதுள்ளது. எனவே பழுதுபட்டு கிடக்கின்ற பஸ்களை திருத்த வேண்டும். குறைந்தது பத்து புதிய பஸ்களை திருகோணமலை மாவட்டத்துக்கு வழங்க வேண்டும்.

அத்தோடு  இ. போ.சபையின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில் காணப்படும் 50சதவீதமான  ஆளணி பற்றாக்குறை நிரப்ப வேண்டும்.மேலும் இ.போ.சபையின் திருகோணமலை மாவட்ட தரிப்பிட உள்ளக ஓடுதளம் மிக மோசமாக பழுதடைந்துள்ளது இதை மறுசீரமைக்க வேண்டும்.திருகோணமலையில் இருந்து கொழும்புக்கு நேரடியாக   புறப்படும் புகையிரதம்   சேவை அண்மையில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனை மீள தொடங்க வேண்டும் எனவலியுறுத்தியுள்ளார்.

 

Tags: அதிகாரசபைவசம் -குகதாசன்எம்.பிதிருமலைதுறைமுகநிலம்
ShareTweetShareShareSendSend
Previous Post

மரண அறிவித்தல் | நடராசா சிவகுருநாதன்

Next Post

கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் மங்களேஸ்.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.
by கண்ணன்
07/01/2026
0

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்  எனவும்,மேற்கு - வடமேற்குத் திசையில், நாட்டின் கிழக்குக் கரையை...

Read more

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.
by கண்ணன்
21/01/2026
0

இன்று (2) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அலுவலகத்தில் வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் " தேசிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வீட்டுத்...

Read more

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!
by Stills
21/01/2026
0

இன்றைய தினம் (22) வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் கிரவல் அகழ்வதை தடைசெய்யுமாறு கோரி பொதுமக்கள்  ஆர்ப்பாட்டப் பேரணி  நடத்தினர். இப்போராட்டத்தை கங்கன்குளம்...

Read more

கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள்- வலுக்கும் கண்டனம்

by அரவிந்த்
22/12/2025
0

தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரைக்கு முன் இடம்பெற்ற போராட்டத்தில்  நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதற்கு சைவ மகா சபை  கண்டனம்...

Read more

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!
by கண்ணன்
19/12/2025
0

சென்னை, நீலாங்கரை: ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் உரிமைகள் தொடர்பாகவும், இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்தும் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்த் தேசியப் பேரவையின் (Tamil National...

Read more

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!
by கண்ணன்
18/12/2025
0

புதன்கிழமை (17) மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள்...

Read more
Next Post
கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் மங்களேஸ்.!

கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் மங்களேஸ்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.